பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை322

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

13. பெருந்தேவபாணி

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

486சூல பாணியை; சுடர்தரு வடிவனை;
நீல கண்டனை; நெற்றியோர் கண்ணனை;
பால்வெண் ணீற்றனை; பரம யோகியை;
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை;
5நூலணி மார்பனை; நுண்ணிய கேள்வியை;

கோல மேனியை; கொக்கரைப் பாடலை;
வேலுடைக் கையனை; விண்தோய் முடியனை;
ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை;
தேவ தேவனை; திருமறு மார்பனை;

10கால மாகிய கடிகமழ் தாரனை;

486. ‘தேவ பாணி’ என்பது கடவுள் வாழ்த்திற்குச் சொல்லப்படும் பொருள். ‘சிவபெருமானே தேவர்கட் கெல்லாம் தேவனான பெருந்தேவன்’ என்பதை நினைவு கூர்ந்து அப்பெருமானது பெருமைகள் அனைத்தையும் எடுத்தோதித் துதிக்கும் பாடலுக்கு, ‘பெருந்தேவ பாணி’ எனப் பெயர் கொடுத்தார்.

இப்பாட்டினுள் ஐகார ஈற்றவாய் வந்தன பலவும் வினை முற்றுக்கள். அவற்றுள் குறிப்பு வினையாயும், தெரிநிலை வினையாயும் உள்ளனவற்றை அறிந்து கொள்க.

உரை: (அடி - 1) சூல பாணியை - சூலம் ஏந்திய கையினை உடையாய். சுடர்தரு வடிவனை ஒளியைத் தருகின்ற திருமேனியை உடையாய். (அடி - 3) பரம யோகியை - யோகியர்க்கெல்லாம் மேலான யோகியாம் தன்மை உடையாய். (அடி - 6) கொக்கரை - சங்கு. ‘அதன் ஒலியோடு கூடிய பாடலை உடையாய்’ என்ப (அடி - 7) வேல் - வேறு படைக்கலம்; மழுமுதலியன (அடி - 8) “நாத்தனை” என்பதில் தன், சாரியை. எனவே, ‘நாவைக் காய்ந்தனை’ என்க. தக்கன் வேள்வியழிப்பில் அக்கினி தேவனது கையை யன்றி, நாவை அறுத்ததாகவும் சொல்லப்படும். “தீயினை நாவினைக் காய்ந்தனை”