பக்கம் எண் :

323பெருந்தேவபாணி

வேத கீதனை; வெண்தலை ஏந்தியை;
பாவ நாசனை; பரமேச் சுவரனை;
கீதம் பாடியை; கிளர்பொறி அரவனை;
போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை;
15ஆதி மூர்த்தியை; அமரர்கள் தலைவனை;

சாதி வானவர் தம்பெரு மான்தனை;
வேத விச்சையை; விடையுடை அண்ணலை;
ஓத வண்ணனை; உலகத் தொருவனை;
நாத னாகிய நன்னெறிப் பொருளினை;

20மாலை தானெரி மயானத் தாடியை;

வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை;
வேத வேள்வியை; விண்ணவர் தலைவனை;
ஆதி மூர்த்தியை; அருந்தவ முதல்வனை;
ஆயிர நூற்றுக் கறி வரியானை;

25பேயுருவு தந்த பிறையணி சடையனை;

என்பதை, ‘யானையைக் காலை வெட்டினான்’ என்பது போலக் கொள்க. (அடி - 9) “திருமறு மார்பினை” என்றது, ‘நீயே திருமாலாகவும் இருக்கின்றாய்’ என்றபடி. (அடி - 10) காலமாகிய தாரனை - காலமாகிய மாலையை உடையாய்; என்றது, ‘காலத்தால் தாக்குண்ணாது நின்றாய்’ என்றபடி. ‘காளமாகிய’ எனப்பாடம் ஓதி, ‘நஞ்சு பொருந்திய பாம்பை மாலையாக உடையாய்’ என்றலும் ஆம். (அடி - 12) பரமேச்சுவரனை - பரமேச்சுவரனாம் தன்மையை உடையை. ஈச்சுரன் - ஐசுவரியத்தை உடையவன். பரமேச்சுவரம் - மேலான ஐசுவரியம். அஃதாவது, எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும் தன்னவாக உடைமை. (அடி - 16) சாதி வானவர் பல இனத்தவராகிய தேவர்கள், அவர்கள் தம் பெருமான், இந்திரன். “பெருமான்” என்பது உயர்திணைச் சொல்லாதலின், ‘பெருமானினை என இன்சாரியை கொடாது தன் சாரியை கொடுத்து, “பெருமான்றனை” என்றார். ‘அவனை உடையை’ என்றபடி. (அடி - 18) ஓதம் - கடல். ஒரு பாதி அம்மை, அல்லது திருமால் ஆதலின் சிவபெருமான் கடல் வண்ணத் தையும் உடையவன். (அடி - 19) நாதன் - குரு (அடி - 20) எரியும் தீ இருள் வந்த பின்பே விளங்கித் தோன்றுதல் பற்றி, ‘மாலை யில் எரியும் மயானம்’ - என்றார். தான், அசை. (அடி - 22) அமரர்களை மேலே கூறினார் ஆகலின், இங்கு “விண்ணவர்” என்றது சிவலோகத்தில் வாழ்பவர்களை (அடி - 23) ‘ஆதி’ என்பது எப்பொருட்கும் முதலாய் தன்மையையும், காலத்தால்