| மாசறு சோதியை; மலைமகள் கொழுநனை; கூரிய மழுவனை; கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்றருள் சிவனை; பூதிப் பையனை; புண்ணிய மூர்த்தியை; | 30 | பீடுடை யாற்றை பிராணி தலைவனை; நீடிய நிமலனை; நிறைமறைப் பொருளினை; ஈசனை; இறைவனை; ஈறில் பெருமையை; நேசனை; நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை; தாதணி மலரனை; தருமனை; பிரமனை; | 35 | காதணி குழையனை; களிற்றின் உரியனை; |
எவருக்கும் முதலாதலையும் குறிக்கும் ஆதலின் மேலேயும், இவ்விடத்திலும் “ஆதி” என இருமுறை கூறியவற்றிற்கு இவ்விரு பொருளையும் ஏற்ற பெற்றியாற் கொள்க (அடி - 24) ஆயிரம் நூற்றுக்கு அறிவரிதலாவது அன்ன பல பேரெண்களிலும் அடங்காமை. எனவே, “ஏகன், அநேகன்”1 என்றவற்றுள் “அநேகன்” என்ற நிலையைக் குறித்ததாம். (அடி - 25) “பேய் உருவு” என்றது பிறர் கூறும். தந்த - தனக்குத் தானே செய்து கொண்ட (அடி - 30) ஆறு - வழி ‘அதன் பயனாய் நின்றாய்’. உயிர்களை, “பிராணி” என்றார். ‘பிராணிகள்’ எனப் பாடம் ஓதுதலும் ஆம், (அடி - 31) “நீடிய” என்றது, ‘காலத்தைக் கடந்த’ என்றபடி. (அடி - 32) ஈசனை - எல்லாரையும், எல்லாவற்றையும் ஆளுதல் உடையாய். இறைவனை - எல்லாப் பொருளிலும் அது அதுவாய் வேறறக் கலந்துள்ளனை. (அடி - 33) நேசனை - அருளுடையாய். (அடி - 35) மலரனை தாமரை மலரை இருக்கை யாக இருத்தலை உடையாய். தருமனை - அறத்தை நடாத்துதல் உடையாய், பிரமனை - பிரமனை உடையாய் (அடி - 35) “குழையனை” என்பது முதலான ஏழும் ஆடுவறிசொல்லின் அன் விகுதிமேல் ஐகார விகுதிபெற்று வருதலால் அவற்றிற்கு, ‘குழையனாய் உள்ளாய், உரியனாய் உள்ளாய்’ என்பனபோல உரைக்க. உரி - தோல் சுந்தரம் - அழகு. விடங்கன் - உளியாற் போழ்ந்து செய்யப்படாமல் தானே முளைத்த இலிங்க வடிவினன். இதனை, ‘சுயம்பு லிங்கம்’ என்பர். ‘சுந்தர விடங்கன்’ என்பது மதுரைத் திருவாலவாய்ப் பெருமானுக்கு உரிய பெயராகவே சொல்லப்படுதலால் இப்பாட்டு அப்பெருமானை, வழுத்திப் பாடியதாகின்றது. மேல் பொதுப்படக் கூறிய கொன்றையை இங்கு, “தார்” எனச் சிறப்பாகக் கூறினார். தார் - மார்பில் அணியும் மாலை.
1. திருவாசகம் - சிவபுராணம் - 5.
|