| சூழ்சடைப் புனலனை; சுந்தர விடங்கனை; தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை; வித்தக விதியனை; தீதமர் செய்கைத் திரிபரம் எரித்தனை; | 40 | பிரமன் பெருந்தலை நிறைவ தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை; நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை; தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த | 45 | ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை; |
(அடி - 38) வித்தகம் திறமை. விதி - நேர்மை. ‘நேர்மையாளனாய் நிற்க வல்லாய்’ என்றபடி. (அடி - 41) கரு மன் - கரிய நிறத்தையுடைய திருமால் செந்நீர் - இரத்தம். ‘பிரமன் தலையைக் கிள்ளிய வயிரவர் அவன் கொண்ட செருக்கை ஒழித்து ஏனைத் தேவர்களும் அவனைப் போலச் செருக்குக் கொள்ளாதபடி ஒழிக்க வேண்டி எல்லாரிடமும் சென்று அக்கபாலமாகிய கலத்தில் இரத்த பிச்சை ஏற்றுக் கடைசியாகத் திருமாலின் இரத்தத்தை ஏற்றார்’ என்பது வரலாறு. ‘திருமாலின் இரத்தத்துடன் கபாலம் நிறைந்துவிட்டது’ என்பது ஒருவரலாறு. இதனையே வைணவர்கள் ‘திருமால் சிவனுக்குப் பிச்சையிட்டு, அவனது பிச்சையெடுக்கும் தொழிலை ஒழித்தருளினான்’ எனப் பெருமையாகப் பேசுவர் என்னும், ‘அப்பொழுதும் கபாலம் நிறையவில்லை என்பதும் ஒரு வரலாறு. | காதி ஆயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோல் கோது வீசினும் கடல்கவிழ்த் தனையசெங் குருதி பாதி யாயினும் நிரம்புறாக் கபாலபா ணியனாய் மாது பாதியன் அவையிடை வந்தனன் வடுகன்.1 |
என்றார் சிவப்பிரகாச அடிகள் (அடி - 42, 43) திருமால் இரத்த பிச்சை தருகையில் ஆவி சோரும் நிலையை அடையத் திருமகள், நிலமகள் இவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி வயிரவர் திருமாலை முன்போல் அருள்புரிந்து சென்றார் என்பது வரலாறு ஆதலின், திருமால் கொண்ட மோகினி வடிவத்திலிருந்து சிவபிரான் ஐயனாரை (அரிகர புத்திரரை)த் தோற்றுவித்தமையை, வயிரவரது கபாலத்தில் திருமால் சொரிந்த குருதியினின்றும் தோற்றுவித்ததாக நகைச் சுவை படக் கூறினார் இனி அன்னதொரு புராண பேதம் பற்றி அவ்வாறு கூறினார் என்றலும் ஆம். உறைத்த உரு - வளர்ச்சி யடைந்த உருவம். (அடி - 45) ஆவம் - ஆவி; உயிர் (அடி - 48) திக்கு
1. பிரபுலிங்க லீலை - கைலாச கதி - 41.
|