நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த 14. கோபப் பிரசாதம் அகவற்பா திருச்சிற்றம்பலம் 487. | தவறுபெரி துடைத்தே! தவறுபெரி துடைத்தே! வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும் அண்ட வாணனுக்(கு) ஆழிஅன் றருளியும் உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த | 5 | மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும் கான வேடுவன் கண்பரிந் தப்ப வான நாடு மற்றவற் கருளியும் கடிபடு பூங்கணைக் காம னாருடல் பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த | 10 | மானுட னாகிய சண்டியை வானவன் ஆக்கியும் மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும் கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும் கடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும் | 15 | பருவரை சிலையாப் பாந்தள் நாணாத் |
487. கோபம் - வெகுளி. அஃது ஆகு பெயராய் அதனால் நிகழ்த்திய செயல்களைக் குறித்தது. பிரசாதம் - அருள். அதுவும் அவ்வாறு அதனால் நிகழ்த்திய செயல்களைக் குறித்தது. கோபமும் அருள் காரணமாகவே எழுந்தமையின் இங்குக் கூறப்படும் இருவகை நிகழ்ச்சிகளும் முறையே ‘மறக் கருணை, அறக் கருணை’ - எனப்படும். (அடி - 1) ஈற்றயல் அடியில் வரும் “கூற்றம்” என்பதை முதல் அடிக்கும் கூட்டி, ‘என்னை’ என்னும் வினாவருவிக்க. (அடி - 3) அண்ட வாணன் - தேவன். கடல் மேல் துயில் கொள்ளும் தேவன் திருமால். ஆழி - சக்கரம். மலரோன் - பிரமன். பிரமனைச் சிரம் அரிந்த வரலாறு மேல் பெருந்தேவ பாணி உரையில் கூறப்பட்டது. (அடி - 6) வேடுவன், கண்ணப்ப நாயனார். இவர் வரலாறு இத்திருமுறையில் வேறு பாடல்களிலும், பெரிய புராணத்திலும்
|