| திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும், கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு தற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும், கூற்றெனத் தோன்றியுங், கோளரி போன்றும் | | 20 | தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும், நெற்றிக் கண்ணும், நீள்புயம் நான்கும் நற்றா நந்தீச் சுவரற் கருளியும், அறிவினை ஓரா அரக்க னாருடல் நெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும் | | 25 | திருவுரு வத்தொடு செங்கண் ஏறும் |
விளங்கக் கூறப்பட்டது. பரிந்து - பெயர்த்து. மற்று, அசை (அடி - 8) கடி படு நறுமணம் பொருந்திய. காமனார் - மன்மதன். ஆர் விகுதி இழிவு குறித்தது. பொடி பட - சாம்பலாகும்படி. (அடி - 10) சண்டி - சண்டேசுர நாயனார். இவரது வரலாறும் பெரியபுராணத்துட் காணத் தக்கது. (அடி - 12, 13) ‘இவபெருமான் கூற்றுவனுக்குக் கூற்றுவனாய் யமனை உதைத்தது மார்க்கண்டேயருக்காக’ என்பது நன்கறியப்பட்டது. (அடி-14) தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தபொழுது அவர்கள் நினைத்தபடி அமுதம் எழாமல் ஆலகால விடம் தோன்றினமையால் அவர்கள் வேண்டு கோளுக்கு இரங்கிச் சிவபெருமான் தான் அதனை யுண்டு கண்டத்தில் நிறுத்தினான். அதனால் கண்டம் நீல கண்டம் ஆயது. (அடி - 15, 16) ஒரு மலையை வில்லாகவும், ‘வாசுகி’ என்னும் பாம்பினை நாணாகவும் கொண்டு ஒரு கணையால் முப்புரத்தை அழித்தமை சங்க இலக்கியத்திற்றானே1 சொல்லப்பட்டது. (அடி - 17, 18) சாக்கிய நாயனார் கல் எறிந்து பேறு பெற்ற வரலாறும் பெரிய புராணத்துள்ளே காணத் தக்கது. தற் கொண்டு - தனக்கு ஏற்புடைத்தாகக் கொண்டு (அடி - 19, 20) கூற்றென - யமன்போல, கோளரி - சிங்கம். யானைக்குப் பகை சிங்கம் வாரணத்து ஈர் உரி - யானை யினின்றும் உரித்த தோல், யானையாய் வந்து எதிர்த்தவன் கயாதரன் (அடி - 21, 22) நந்தீச்சுவரன், நந்திதேவர். இவர் செய்த தவத்திற்காக இவருக்குச் சிவபெருமான் தனது உருவைக் கொடுத்தலாகிய சாரூப பதவியைத் தந்தருளினான். நற்றா - நல்லதாக; நல்லது உண்டாக (அடி - 23, 24) அறிவு - அறியத் தக்க பொருள். ஓரார் - ஆராய்ந்துணராத அரக்கனார், இராவணன். இங்கும் ஆர் விகுதி இழிவு குறித்து நின்றது. “நெறு நெற” என்பது ஒலிக் குறிப்பு. (அடி - 25, 26) அசுரன், வாணன். இவன் செய்த பூசைக்காக இவனுக்குச் சிவபெருமான் தனது சாரூபத்தை வழங்கித்
1. புறநானூறு - 55.
|