| அரியன திண்திறள் அசுரனுக் கருளியும், பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து, மல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும், தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்து | 30 | மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும், செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும், பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும், கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும், நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும், | 35 | சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும், மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும், தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும், சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும், கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும், | 40 | ஆலின் கீழிருந் தறநெறி அருளியும், |
தான் நடனம் புரியும் பொழுது குடமுழா வாசிக்கப் பணித்தருளினான். சாரூபம் பெற்றமையால் அவனுக்கு ஊர்தியும் இடபமாயிற்று. ஏறு - இடபம் (அடி - 27) பல் கதிர் உரவோன், சூரியன். இவன் பல்லைத் தகர்த்தது தக்கன் வேள்வி அழிப்பில். அதனைக் கந்த புராணத்துட் காண்க. (அடி - 28) பிருங்கிருடி, கணங்களில் ஒருவர். “தண்டி குண்டோதரன் பிங்கிருடி”1 என அப்பரும் அருளிச் செய்தார். (அடி - 29) தக்கன் வேள்வியை அழித்தது கந்த புராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. (அடி - 30) நந்திமாகாளர், திருக்கயிலைக் காவலருள் தலைவர். அத்தலைமை அளித்தது மிக்க வரம் ஆதல் அறிக. (அடி - 31) தீக்கடவுள் - அக்கினி தேவன் இவனது கையை அறுத்தது தக்கன் வேள்வியில் (அடி - 32) ‘நெடும்படை பைந்தார்ப் பார்த்தற்கு அருளியும்’ என மாற்றி யுரைக்க. நெடும் படை - பெரிய அத்திரம். பார்த்தன் - அருச்சுனன். (அடி - 33) “கதிர்” என்றது நிலவை. ‘காலால் பயன் கெடுத்து’ என்க. பயன் கெடுத்தது, கீழே தேய்த்து வலியிழக்கச் செய்தது. இதுவும் தக்கன் வேள்வியில் (அடி - 34) நீள் நகர், அளகாபுரி (அடி - 37) தாருகன், இவன் கந்த புராணத்தில் சொல்லப்பட்ட தாரகன் அல்லன் அவனின் வேறானவன் “கானகம் உகந்த காளி தாருகன் - பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்”2 எனச் சிலப்பதிகாரத்து கூறப்பட்டது காண்க. (அடி - 38) சிலந்திக்கு
1. திருமுறை - 6.93.7. 2. வழக்குரை காதை - அடி 39, 40.
|