| இன்னவை பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதங் கூறுங் காலைக் கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன் புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன் | 45 | உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர் அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர்; ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை அடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக் கிருமி நாவாற் கிளத்தும் தரமே, அதாஅன்று, | 50 | ஒருவகைத் தேவரும், இருவகைத் திறமும், மூவகைக் குணமும், நால்வகை வேதமும், ஐவகைப் பூதமும், அறுவகை இரதமும், எழுவகை ஓசையும், எண்வகை ஞானமும், ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும், | 55 | பத்தின் வகையும் ஆகிய பரமனை, |
அரசளித்ததைப் பெரிய புராணம் கோச்செங்கட் சோழர் வரலாற்றில் காண்க. (அடி - 39) கார் - அருமை; அழகு. திருமாலின் ஊர்தியாகிய கருடனை இடபத்தின் மூச்சுக் காற்றில் அகப்பட்டு உழலச் செய்ததைக் காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்த படலத்தில் காண்க. (அடி - 44) புடம் - மறைப்பு; நிழல் (அடி - 46) ஆதர் - அறிவிலார். ‘உளர் ஆவர்’ ஆக்கம் வருவித்துரைக்க. (அடி - 47) ஒடுங்கா - முடிவு பெறாத. உம்பர்கோன். சிவபெருமான் (அடி - 49) “கிருமி” என்றது ஆசிரியர் தம்மையே குறித்தது. பரம் - அளவு. ஏகாரம், எதிர் மறைவினா. (அடி - 50) ஒருவகைத் தேவர், சுவர்க்க லோக வாசிகள் திறம் - கூறுபாடு. இருவகைக் கூறுபாடு புண்ணியம் பாவம் (அடி - 52) இரதம், நாவால் நுகரப்படும் சுவை. (அடி - 53) ஓசை - இசை, ஞானம், புத்திகுணபாவகங்கள் எட்டில் ஒன்று. இஃது எண் வகைப்படுதலைச் சிவஞான போதம் 2ஆம் சூத்திர பாடியத்தால் உணர்க. (அடி - 54) நவரத்தினங்கள் போல ஒன்பது வகையான நிறம் உடைய மலர்கள் விரும்பப்படு கின்றன. (அடி - 55) “பத்தின் வகை” என்பதனை, “பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே”1 என்னும் அப்பர் திருமொழியால் உணர்க. (அடி - 56) ‘நினைவோர்க்கு இன்பனை’ என மாற்றிக் கொள்க. (அடி - 60) (அடி - 70) கல் - மலை. கண்டன் - அளவுட்படுபொருள்களாய் உள்ளான். (அடி - 71) தொன்மை, தொன்மைத்தான பொருள்; ஆகுபெயர். (அடி - 72) நித்தன் -
1. திருமுறை - 4.18.10
|