பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை332

இன்பனை நினைவோர்க்(கு), என்னிடை அமுதினைச்,
செம்பொனை, மணியினைத், தேனினைப், பாலினைத்,
தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா நிமலனை, நீடுயர்
60செந்தழற் பவளச் சேணுறு வரையனை,

முக்கட் செல்வனை, முதல்வனை, மூர்த்தியைக்,
கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக்
கலந்து கசிந்துதன் கழலிணை யவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்,

65தேவ தேவனைத், திகழ்சிவ லோகனைப்,

பாவ நாசனைப், படரொளி உருவனை,
வேயார் தோளி மெல்லியல் கூறனைத்,
தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்

70கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத்

தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை,
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை,
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்,
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை,

75இனைய தன்மையன் என்றறி வரியவன்

அழிவில்லாதவன். முத்தன் - பாசம் இல்லாதவன். (அடி - 73) மறையன் - வேதப் பொருளாய் உள்ளவன். (அடி - 77, 78) ‘முயல் விட்டுக் காக்கைப்பின் போவது போல’ என்பது ஒரு பழமொழி, அப்பர் திருமொழியிலும் வந்துள்ளது.1 வேட்டையாடுபவன் முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான்; அதை இடையில் விட்டுவிட்டுக் காக்கைப்பின் போனால் யாது பெறுவான்? ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமை யாகும். கலவர் - படைக் கலம் ஏந்தியவர்; வேட்டை யாடுபவர். (அடி - 79) “விளக்கிருக்க மின்மினித் தீக்காய்தல்’ என்பதும் முன் கூறியது போன்ற ஒரு பழமொழி. இதுவும் மேற்குறித்த அப்பர்திருமொழியில் வந்துள்ளது (அடி - 80) அளப்பரும் சிறப்பு, அறியாமையின் மிகுதி. (அடி - 81, 82) கச்சம் - அளவு; எல்லை எல்லைக்கு உட்பட்ட ஆற்றல் உடையவர் களாய்ப் பெருஞ் செயலை முடிக்க மாட்டாத சிறிய தேவர்கள். கொச்சை - நிரம்பாமை; அரை


1. திருமுறை - 5.2