பக்கம் எண் :

333கோபப் பிரசாதம்

தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருக்க மின்மினி கவரும்
80அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்

கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப்
பிச்சரைப் போலஓர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று

85வட்டணை பேசுவர் மானுடம் போன்று

பெட்டினை உரைப்போர் பேதையர், நிலத்துன்
தலைமீன் தலை;எண் பலமென்றால் அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மந்திர மாகுவர்; மாநெறி கிடப்பவோர்

90சித்திரம் பேசுவர் தேவ ராகில்

குறை. (அடி - 83) பிச்சர் - பித்தர். ஓர் - சிறுமையுடைய (அடி - 84) ஆரியப் புத்தகம், பல தெய்வ வழிபாட்டைக் கூறும் ஆரிய நூல், அத்தகைய நூல் தமிழில் இல்லாமையால், ‘ஆரியப் புத்தகம்’ என்றே கூறினார். அது வீனே அலையப் பண்ணுதலால் அதனை, “பேய்” என்றார் (அடி - 85) வட்டணை - சுற்றிச் சுற்றி முடிவில்லாது வரப் பேசுதல். மானுடராயினும் மானுடப் பண்பு இல்லாமையால் “மானுடம் போன்று” என்றார். “மக்களே போல்வர் கயவர்”1 என்னும் திருக்குறளைக் காண்க. (அடி - 86) பெட்டு - பொய், (அடி - 87, 88) குறும்பன் ஒருவன் வேறு ஒருவனைப் பார்த்து, “உனது தலை, மனிதர் தலையாய் இல்லை; மீன் தலையாய் உள்ளது; அதன் எடை எட்டுப் பலமே” என்று சொன்னால் உடனே தன் தலையை வெட்டி எடுத்து நிறுத்திப் பார்ப்பவர் உலகில் ஒருவரும் இல்லை. ஒருத்தர், பொதுமை பற்றி வந்த பன்மை; ‘ஒருத்தரும்’ என்னும் இழிவு சிறப்பும்மை விரிக்க. (அடி - 89) மத்திரம் ஆகுவர் - அவ்வாறு சொன்னவர்மேல் சினங்கொள்வர். மாநெறி, எல்லா நெறிகளையும் தன்னுள் அடக்கி நிற்கும் நெறி; அது சிவ நெறி. மத்திர மாகுவர் - அதன் மேல் காழ்ப்புக் கொள்பவர். (அடி - 9) சித்திரம் - சொல்லளவில் அழகாய்த் தெரியும் சொற்கள். பேசுவர் - பேசப்படுபவர் தேவராகில் அவரால் குறிக்கப்படு வோர் பெருந்தேவராயின் (அடி - 91, 92, 93) “இன்ன தீயோரைக் காய்ந்தனர்;


1. திருக்குறள் - 1071.