பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை334

இன்னோர்க் காய்ந்தனர்; இன்னோர்க் கருளினர்;
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப தில்லை; ஆகிலும்
மாடு போலக் கூடிநின் றழைத்தும்
95மாக்கள் போல வேட்கையீ டுண்டும்

இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்றிரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னேகொண்ண் டேகாக் கூற்றம்

100தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.

திருச்சிற்றம்பலம்


இன்ன நல்லோர்க்கு அருள் புரிந்தனர்” என்பது எங்கேனும் சொல்லப்படுகின்றதா? இல்லையே - என்க. இங்ஙனம் கூறியது, ‘புராண இதிகாசக் கதைகளாய் இல்லாமல் சண்டேசுரர், கண்ணப்பர், கோச் செங்கட் சோழர், மூர்த்தியார் முதலியோர் வரலாறுபோல வரலாற்று முறையில் சொல்லக் கேட்கின்றோமா’ என்னும் கருத்தினாற் கூறியதாகும். (அடி-94) அழைத்தல் - கூப்பீடு செய்தல். (அடி-95) ஈடுண்டல் - உட்படுதல் (அடி-96) இப்படி - ஞானம் - இங்கே சொல்லப்பட்ட ஞானம். அப்படி அமைத்தல் - மேல் வட்டணை பேசுவோர் கூறும் ஞானமாகத் திரித்து அமைத்தல். (அடி-97) மேற்கூறிய பூக்கமழ் சடையனும் புண்ணிய நாதனும் ஆகிய இறைவனை இன்ன தன்மையன் என்று இரு நிலத்து முன்னே (இளமையிற்றானே) அறியாமாக்களை’ என்க. (அடி-99) இன்னே - இப்பொழுதே. ‘அவர்களைக் கூற்றம் கொளல் வேண்டும்’ என்றது அவர்கள் மேல் எழுந்த சீற்றத்தால் அன்று; பயனில் உழப்புச் செய்தல் பற்றி. பரிதாபத்தினாலாம்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று1

என்னும் திருக்குறள் போல்பவற்றைக் காண்க. (அடி-100) தவறு - கடமையைச் செய்யாமை, ‘கூற்றம்’ என்பது சொல்லால் அஃறிணையாதலின், “உடைத்து” என அஃறிணையாகக் கூறினார்.

கோபப் பிரசாதம் முற்றிற்று


1. திருக்குறள் - 183, 1050