489. | மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன் கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய் அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண்புற்ற கார். | | 2 |
490. | ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும் கோலக் குழற்சடையும், கொல்லேறும் - போல்வ, இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம் கருண்டொன்று கூடுதலின் கார். | | 3 |
491. | இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக் குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் - சுருள்கொண்டு |
“அரைக்கு” என்பதை ‘அரைக்கண்’ எனத் திரிக்க. இஃது உருபு மயக்கம். அசைத்த - கட்டிய. ‘புற்றில் அணைய’ எனச் சொல்லெச்சம் வருவிக்க. சங்கு திருமாலுக்குச் சிறப்பாக உரித்தாயினும், ‘பிறர் அதனைக் கொள்ளலாகாது’ என்பது இல்லை. வெற்றிச் சங்குத் தீயோரைக் காய்வார் பலரும் கொள்வதே. அதனால் இங்குச் சிவபெருமான் சங்கு உடைமையைக் கூறினார். ‘அவன் கைச்சங்கம்போல்’ எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. 489. குறிப்புரை: “ஐ வாய்” என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. அழல் அரவம் - அழலும் அரவம். அழலும் - சீறுகின்ற; வினைத் தொகை. கழல் அரவம் - காலில் அணிந்த ‘கழல்’ என்னும் அணிகலத்தின் ஒலி. காண்பு உள்ள - அவ்வொலி புலப்படுதற்கு இடமான; அஃதாவது இடி முழக்கத்தைச் செய்கின்ற. “அவன்றன்” என்பதை, “மை ஆர் மணி மிடறு” என்பதற்கு முன்னே கூட்டுக. மை ஆர் - கருமை நிறம் பொருந்திய. மணி, நீல மணி, மற்று, அசை ‘சிலையைக் காட்டிற்று’ என்க. சிலை - வில். விலகி குறுக்கிட்டு. 490. குறிப்புரை: ‘கார், அம்பு ஒன்று அவ்வானம் இருண்டு, ஒன்று மின் தோன்றி, கருண்டு ஒன்றுதலின். மிடறும், சடையும், ஏறும் போல்வ’ என இயைக்க. அம்பு ஒன்று - மழை நீர் பொருந்திய. ‘வானத்தில்’ என ஏழாவது விரிக்க. ஒன்று மின் - பொருந்திய. மின்னல் தோன்றி - தோன்றப் பெற்று. இயம்புதல் - ஒலித்தல். கருண்டு - மயங்கி; அஃதாவது பல்வேறு வகைய வாய். ஏறு - இடபம், இருளுதலால் மிடறுபோல்வனவும், மின்னுதலால் சடை போல்வனவும், இடிமுழக்கம் செய்தலால் இடபம் போல்வனவும் ஆயின. இவ்வெண்பாவின் பாடம் பெரிதும் பிழைபட்டுக் காணப்படுகின்றது. 491. குறிப்புரை: குருள் - தளிர். காம்பு - மூங்கில். மூங்கில் தோளுக்கு உவமையாகச் சொல்லப்படுவதலால், அவற்றின் மேல்
|