பக்கம் எண் :

337கார் எட்டு

பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார்.

4

492.கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்(று)
ஆடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.

5

493.பாரும், பனிவிசும்பும், பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்;
அரவம் செலஅஞ்சும்; அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.

6


தங்கும்மேகங்களுக்கு அவை ஏறியிருக்கத் தோளைத் தந்ததாகக் கூறினார். ‘கார், காம்பினங்கள் தோள் ஈய (அவற்றின் மேல் தங்கி) மின்னிப் பாம்பினங்கள் அஞ்சிச் சுருள் கொண்டு படம் ஒடுங்க ஆர்த்தது’ என்க.

492. குறிப்புரை: கோடல் - காந்தள். அதன் அரும்பு பாம்பு போலும் தோற்றத்தை உடையது ஆகலின் ‘கோடல் கோடு அரவம் அரும்ப’ என்றார். கோடு - வளைந்த. ‘அரவம் போல அரும்ப’ என்க. மழைக் காலத்தில் காந்தள் அரும்பெடுத்து மலரும். குரு - நிறம். மணி, நவமணிகள். கான்று - உமிழ்ந்து. அணை - புற்று. பொற்பு அகலம் - அழகிய மார்பு. கல் - மலை. அதனது தனது தன்மை. கற்பு, ‘கல்லினது தன்மையாகிய அகன்ற இடத்தில் காணப்பட்ட கார்’ என்க.

493. குறிப்புரை: முதலிலும் ‘கார்’ என்பது வருவித்து, ‘மின் விலகி, இருள் கீண்டு ஊரும்’ என்க. பார் - நிலத்தின் கீழ் இடம். பனி விசும்பு. குளிர்ந்த ஆகாயம். பாசுபதன் சடை - சிவபெருமானது சடை. ‘இம்மூன்றிடங்களும் இருள் தங்கி யிருக்கும் இடம்’ என்றார். ஆரும் - பொருந்தும். சிவபெருமானது சடை முடி ‘அடவி’ (சடாடவி) எனப்படு தலால், அதனையும் இருள் தங்கும் இடமாகக் கூறினார். விலகி - குறுக்கிட விட்டு. ஊரும் - தவழும் (அது பொழுது) ‘அரவம் வெளியே செல்ல அஞ்சும். ‘ஆயினும் அம் சொல்லார் (அழகிய சொற்களை யுடைய பெண்கள் பிரிந்து சென்ற கணவர் மீண்டு வருவார் என மகிழ்ந்து) அக் கார் காண்பார்கள். கண்டு, கர இந்து அம் (இவற்றுள்ளே மறைந்து நிற்கின்ற நிலவு அழகிது) என்பார்கள் ‘இங்ஙனமெல்லாம் மகிழ்வார்கள்’ என்றபடி. கர இந்து, இறந்த கால வினைத்தொகை.