494. | செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி, அழுந்தி, அலர்போல் உயர - எழுந்தெங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே, காவிசேர் கண்ணாய்அக் கார். | | 7 |
495. | காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப் பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர் அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர் கண்டம்போல் மீதிருண்ட கார். | | 8 |
திருச்சிற்றம்பலம்
494. குறிப்புரை: காவி - கருங் குவளைப் பூ ‘அதன் தன்மை சேர்ந்த கண்களையுடைய தோழீ’ என்க. அக்கார் - அஃதோ தோன்றுகின்ற மேகம்; ‘அன்பை அளத்தற் பொருட்டு, மின்னி, அழுந்தி, உயர எழுந்து, எங்கும் உற்றது; (யான் ஆற்றுமாறு எவன்) என முடிக்க. ஈற்றில் வருவிக்கப்படுவது குறிப்பெச்சம். அழுந்துதல் - இறுகுதல். ‘எனது ஆற்றாமையைப் பலரும் இகழ்கின்றனார்கள் என்பதை நீ சொல்ல வேண்டாமலே யான் அறிவேன்’ என்றற்கு, இடையே, “அவர்போல் உயர எழுந்து” என்றாள். ஆற்றாமையால் ஆவி சோர்தலைக் கண்டும் நீங்காமையால், ‘உயிர்விடுகின்றாளா, பார்ப்போம்’ என்று இருக்கின்றது’ என்பாள் “ஆவி சோர் நெஞ்சினரை அன்பு அளக்க உற்றது” என்றாள்; இரண்டன் உருபை ஆறன் உருபாகத் திரிக்க. இது தலைவனது பிரிவு நீட்டிக்க ஆற்றாளாய தலைமகளை, ‘ஆடவர் பிரிந்த செயலை முடித்து வருங்காறும் ஆற்றியிருத்தல் மகளிர் செயற்பாலது; அது நீ செய்கின்றிலை’ என வற்புறுத்திய தோழிக்குத் தலைவி, ‘அன்பிலார் ஆற்றி யிருப்பர்; யான் ஆற்றேன்’ என வன்புறை எதிரழிந்து கூறியது. 495. குறிப்புரை: அண்டம் - ஆகாயம். அது நீல நிறத்தை உடையது ஆதலின் சிவபெருமானுடைய கண்டத்திற்கு உவமையாயிற்று. “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே”1 என உவமைக்கு உவமை கூறலை விலக்கியது, உவமையால் பொருளைச் சிறப்பிப்பதாகிய நேர்நிலை உவமத்திற்கே யாம். அதில் உவமைக்குக் கூறும் உவமை ஆகவே அதற்கு அது விலக்கப்பட்டது. பொருளால் உவமையைச் சிறப்பிப்பதாகிய எதிர்நிலை உவமத்தில் உவமைக்கு உவமை கூறினால் இரண்டானும் பொருள் சிறப்பெய்துதலின் அதற்கு அவ்விலக்கு இன்றாம். ‘அண்டம்போல் மீதிருண்ட கண்டம்
1. தொல் - பொருள் - உவம இயல்.
|