போல்’ என இயைக்க. “ஆதியான்” என்பதும் “கண்டம்” என்பதனோடே முடியும். ஆதியான், சிவபெருமான். ஆய் மணி - ஆராய்ந்தெடுக்கப்பட்ட நீல மணி. ‘அதன் தன்மை சேர்ந்த கண்டம்’ என்க. தளவம் - முல்லை. ‘தளவம் பூ ஆர’ என மாற்றியுரைக்க. ஆர - நிறைய. மலரவும், ‘சொரியவும், ஆரவும் புகுந்தின்று’ என்க. புகுந்தின்று - புகுந்தது. இன், சாரியை. இச்சாரியை ஈறு திரியாது வருதல் பண்டைய வழக்கம். ‘கூயிற்று, போயிற்று’ என்றாற்போல் ஈறு திரிந்தே வருதல் பிற்கால வழக்கம். அதனால் பிற்காலத்தில் இச்சாரியை ஏற்ற இடத்தே வருவதாம். “புகுந்தின்று” என்பதில் தகர ஒற்று இறந்த காலம் காட்டிற்று. ‘கூயிற்று, போயிற்று’ என்பவற்றில் யகர ஒற்றே இறந்த காலம் காட்டுதலை, ‘ஆயது, போயது’ முதலிய வற்றான் அறிக. கார் எட்டு முற்றிற்று
|