பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை340

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

16. போற்றித் திருக்கலிவெண்பா
திருச்சிற்றம்பலம்

496.
1.திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த
2.குறுத்தாள், நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து, நிலம்ஏழ் - உறத்தாழ்ந்து
3.பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி! - அன்றியும்
4.புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்
5.காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி! - நாணாளும்

496. சிவபெருமானது திருப்புகழ் ஒவ்வொன்றையும் தனித்தனி எடுத்துக் கூறிப் போற்றி கூறும் கலிவெண்பா யாப்பிற்றாகிய செய்யுளாதல் பற்றி இது ‘போற்றித் திருக்கலி வெண்பா’ எனப் பெயர் பெற்றது. பஃறொடை வெண்பாவே பிற்காலத்தில் ‘கலிவெண்பா’ எனப் பெயர் பெற்றது.

கண்ணி - 1, 2, 3 (1) திருமால் வராக வடிவம் கொண்டு திருவடியைத் தேடிக் காணாமை இவற்றால் கூறப்பட்டது. முதற்கண் உள்ள திரு, இலக்குமி. ‘எருத்தத்து இலங்கிய, வெண் கோடு முதலாக நீல நிறம் முடிவான இவற்றால் பொலிந்து வரைபோலும் பன்றி’ என்க. வரை - மலை. எருத்தம் -பிடரி ‘எருத்தத்தால்’ என உருபு விரிக்க. ‘குறுந்தாள்’ என்பது வலிந்து நின்றது. தாள் - கால். குன்றிக் கண் - குன்றி மணிபோலும் கண்கள் ‘பன்றித் திருஉருவாய் நிலம் ஏழ் உறத் தாழ்ந்து காணாத பாதங்கள்’ என இயைக்க. நிலம், இங்குப் பாதல உலகங்கள். நின்றவா நின்ற நிலை - என்றும் ஒரு பெற்றியன வாய்த் திரிபின்றி நிற்கும் நிலை. (இதற்குப்) போற்றி - வணக்கம்.

கண்ணி - 3,4.5: புண்டரிகம் - தாமரை மலர். அதனுள் இருந்த புத்தேள், பிரம தேவன். ‘பறவை’ என்னும் சாதி பற்றி