16. | வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம் நிறையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த |
17. | பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி! - அத்தகைத்த |
18. | வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்(கு) |
19. | ஒட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை வெட்டிச் சிரித்த விறல்போற்றி! - மட்டித்து |
‘அதற்கு வீரம் கொடுத்து’ என்க. “எறியும்” என்றது, ‘எறிந்து கொல்லும்’ எனத் தன் காரியம் தோற்றி நின்றது. மாகாளி. வீர மாகாளி. ‘அவள் தான் கொண்ட கோபம் தணியாது உலகிற்கு இடர் புரிந்தமை யால், அவளை நடனப் போரினால் சிவபெருமான் நாணம் அடையச் செய்து வென்றான்’ என்பது வரலாறு. இந்நடனப் போர் நிகழ்ந்த இடமாகக் கூறப்படுவது திருவாலங்காடு. கண்ணி - 15, 16, 17: ‘வாளரக்கனைத் தடுத்து அவன் வாய் ஆறு உதிரம் நிரை எடுத்து’ என உருபு விரித்தும், சுட்டுப் பெயர் வருவித்தும் உரைக்க. வரை, கைலாயமலை, அதனை எடுத்த அரக்கன் இராவணன். நிரை, தாரைகளின் வரிசை. எடுத்து - தோன்றி. இற்று - முரிந்து. இரு செய்தென் எச்சங் களும் எண்ணின்கண் வந்து, “நெரிய” என்பதனோடு முடிந்தன. புரை எடுத்த - ‘குற்றத்தை மேற் கொண்ட முடியும், தோளும்’ என்க. பத்து அனைய - ‘பத்து’ என்னும் அவ் எண்ணிக்கையை உடைய. முடி, ஆகுபெயராய் அதனை அணிந்த தலையை உணர்த்திற்று வலி பொறுக்க மாட்டாது அழும் அளவிற்கு ஊன்றியதன்றி, இறந்தொழியும்படி ஊன்றாமையால் “மெத்தனவே வைத்த விரல்” என்றார். கண்ணி - 17, 18, 19: (இவற்றில் பிரமன் தலையை வெட்டிய வரலாறு வேறு வகையாகக் கூறப்படுகின்றது. “நாமகள் நாசி, சிரம்பிரமன் பட” எனத் திருவாசகத்தில் பிரமன் சிரம் தக்கன் வேள்வியில் வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. “அரி அயன் தலை வெட்டி வட்டாடினார்”1என்பது அப்பர் திருமொழி.) “தகைத்த” என்பது ‘தகை’ என்பது அடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம் மந்திரித்தல் - மந்திரா லோசனை செய்தல், மந்திரம் - மந்திராலோசனை செய்து முடிக்கப்பட்ட பொருள்.இஃது
1. தருஉந்தியார் - 13. 2. திருமுறை - 5.85.1.
|