பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை344

20.வாலுகத்தால் மாவிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்(கு)

21.ஒட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்

22.பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி! - நிற்க,

23.வலந்தருமால், நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்

24.சக்கரத்தால் ஈர்ந்(து)அரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஃதன் றீந்த விறல்போற்றி! - அக்கணமே

25.நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய, - மிக்கிருந்த

இரகசியமானது. விதிர் விதிர்த்தல். அஞ்சுதல், நடுங்குதல் பிரமன் அஞ்சியது, ‘இம்முடிவு தன்னால் ஏற்பட்டது) எனக் கொண்டு அசுரர்கள் தனக்குக் கேடு சூழ்வர் என நினைத்தமை யாலாம். மேல் - பின்பு. தானவர் - அசுரர். ‘விதிர் விதிர்த்து, மேல் தானவருக்கு நவில ஓடி, ஒட்டிக் குறளை உரைத்த அயன்’ என்க. குறளை உரைத்தல் - கோள் சொல்லல், ஒட்டி - அவர்களோடு பொருந்தி. ‘இது பற்றித் தேவர்கள் முறையிடச் சிவபெருமான் அயனது சிரசை அறுத்தான்’ என்க.

கண்ணி - 19, 20, 21, 22: மட்டித்தல் - பூசுதல். அது நன்கு அமையச் செய்தலைக் குறித்தது. வாலுகம் - வெண்மணற் குவை. வகுத்து - செய்து. உகைத்து - அப்புறப்படுத்தி, ஒட்டிய - தன்னையும் வெருட்டிய. வன்தாதை -கொடிய தகப்பன், ‘தகப்பன்’ எனக் கருதுதற்கு உரியன் அல்லாதவன்’ என்றபடி. சண்டி - சண்டேசுர நாயனார். வேறாக - தனியாக. ‘வேறாக இருத்தி’ என்க. பூ மாலை தான் சாத்தி எடுத்த பூ மாலை. போனகம் - நிவேதனம். இதுவும் நிவேதித்து. நற்கோலம் - சிவ வடிவு. “நற்கோலம்” என்பதிலும் உம்மை விரிக்க. இவற்றை யெல்லாம் கொடுத்தது, மகன்மை யுரிமை மிக்குத் தோன்றவாம்.

கண்ணி - 23, 24, 25: வலம் தரும் மால் - வெற்றியைத் தருகின்ற திருமால். அலந்து அரு மால் கொள்ள - அலமந்து, நீக்குதற்கரிய மயக்கத்தைக் கொள்ள, அடக்கும் - துன்புறுத்தும். சலந்தரன் - சலந்தராசுரன். அரி - திருமால். விறல் வெற்றி.