26. | அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களிந்த செங்கைத் திறத்த திறல்போற்றி! - திங்களைத் |
27. | தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப் |
28. | பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு வரமன் றளித்தவலி போற்றி! - புரமெரித்த |
29. | அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று |
30. | நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல் கொண்டவா போற்றி! - விடைகாவல் |
கண்ணி - 24,25,26: நக்கு இருந்த - பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டிருந்த. ‘அக்கணமே மூக்கரிந்து’ என்க. தொக்கு இருந்த -தொகைமிக்கு இருந்த. வண்ணம் - வகை; புகழ். அங்கைத் தலத்தே அணி மாலை - உள்ளங்கையில் வைத்திருத்தற்குரிய செபமாலை, ஆங்கு அளித்த - அப்பொழுதே கொடுத்த. ‘அணி மானை’ என்பதும், ‘ஆங்கணிந்த’ என்பதும் பாடங்கள் அல்ல. கண்ணி - 26,27,28: திங்கள் - சந்திரன். தக்கன் வேள்வியில் சந்திரன் தரையில் வைத்துத் தேய்க்கப்பட்டான். “அதுவே” என்பதனை, ‘அதனையே’ என உருபுவித்துரைக்க. ‘வாய்த்த’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாய்த்த - தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களை மடிவித்துப் பின் எழுப்பியதாகக் கூறப்பட்ட செய்தி இங்குச் சிறையில் அடைத்துப் பின்பு விடுவித்ததாகச் சொல்லப்பட்டது. கண்ணி - 28,29,30: திரிபுரத்தை யெரித்த பொழுது அவற்றுள் இருந்த பலருள் சிவபத்தியினின்றும் மாறாது உறைத்து நின்ற, ‘சுதன்மன், சுசீலன், சுபுத்தி’ - என்னும் மூவர் திருவருளால் உய்திபெற்றிருந்தனர். திரிபுரத்தசுராகிய தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி - இவரும், மற்றை யோரும் அழிந்தொழிந்தனர். உய்ந்த மூவரில் இருவர் கோயில் வாயில் காவலராகும் வரத்தையும், ஒருவன் முழவு வாசிக்கும் வரத்தையும் பெற்றனர். | மூவார் புரங்கள் எரித்த அன்று | | மூவர்க் கருள் செய்தார்;1 |
1. திருமுறை - 1.69.1.
|