31. | தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல் வானவர்கள் வேண்ட மயிலூரும் -கோனவனைச் |
32. | சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து வானாள வைத்த வரம்போற்றி! - மேனாள் |
33. | அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்(கு) |
34. | அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி! - கவைமுகத்த |
| மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் | | இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல் | | காவ லாளரென் றேவிய பின்னை | | ஒருவன் நீ கரி காடரங் காக | | மானை நோக்கிஒர் மாநடம் மகிழ | | மணிமுழா முழக்க அருள் செய்த | | தேவ தேவ1 |
உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல் கொண்டு எய்யவல் லானுக்கே உந்தீபற2 என்னும் திருமுறைகளைக் காண்க. அமர்ந்து - விரும்பி. நிகழ்வித்து - யாவரும் அறியச் செய்து. ‘நடை காவலால்’ என உருபு விரிக்க. நடை - ஒழுக்கம். காவல் - அதனைக் காத்துக் கொள்ளுதல். காத்துக் கொண்டவர் அம்மூவர். கடை - வாயில். கண்ணி - 30, 31, 32: ‘காவல் விடை’ என மாற்றி, ‘வாயில் காவலர் பால் விடை பெற்று அடைந்த வானவர்கள்’ என உரைக்க. தானவர்கள் - அசுரர்கள். மயில் ஊரும் கோன், முருகன். முருகனை வான் ஆள வைத்தமையால் அவன் அசுரரை அழித்து வானவரை வாழச் செய்தான் என்க. கண்ணி - 32, 33, 34: அந்தகன் - அந்தகாசுரன். அண்டர் அண்டம் - தேவர் உலகம். ‘அந்தகாசுரனை வைரவர் சூலத்தாற் குத்தி எடுத்து உயரத் தூக்கி வைத்திருக்க, அவன் அகந்தை அடங்கிப் பல நாள் துதிசெய்தமையால் கீழே விடுத்து முத்தியடையச் செய்தார்’ என்பது புராணம். பவம் - பிறப்பு. பாவனை - நினைவு; சங்கற்பம்.
1. திருமுறை - 7.55.8. 2. திருவாசகம் - திருவுந்தியார் - 4.
|