497. | உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு) ஓவற இமைக்குஞ் சேண்விளங்(கு) அவிரொளி உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள் |
5. | செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்(து) |
10. | இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்(து) உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன், மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால், வாங்கிய நுசுப்பின் பணைத்தோள் |
15. | கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந்(து) இயற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் |
20. | துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் |
25. | மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகள்அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்(டு) |