| உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின்(று) எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்(பு) |
30. | இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குற(டு) உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் |
35. | குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தா(து) அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி ‘வாழிய பெரி(து’ என்(று) ஏத்திப் பலருடன் |
40. | சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூர்அ மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பியல் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன், |
45. | பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல், உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் |
50. | பெருமுலை அலைக்கும் காதின், பிணர்மோட்(டு) உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர |
55. | வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணம்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக், கவிழ்இணர் |
60. | மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்(து) எய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய் |