பக்கம் எண் :

351திருமுருகாற்றுப்படை

இரவலன் நிலை

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்(து) உறையும்
செவ்வுநீ நயந்தனை ஆயின் பலவுடன்
65.நன்னர் நெஞ்சத்(து) இன்நசை வாய்ப்ப

இன்னே பெறுதிநீ முன்னிய வினையே;

திருப்பரங்குன்றம்

செருப்புகன்(று) எடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
70.திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து

மாடம்மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்(று) அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்

75.கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்

அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்(று)அமர்ந்(து) உறைதலும் உரியன்;
அதாஅன்று,

திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
80.வாடா மாலை ஒடையொடு துயல்வரப்,

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண்(டு)
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

85.முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி

மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்

90.தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார்