| விசும்(பு)ஆறாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று, |
திருஆவினன்குடி 130. | சீரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர், மாசற விளங்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர், நன்பகல் | 135. | பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை | 140. | யாவதும் அறியா இயல்பினர், மேவரத் துனியில் காட்சி முனிவர் முன்புகப் புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின் | 145. | நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம்(பு) உளர, நோயின் றியன்ற யாக்கையர், மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர், இன்னகைப் | 150. | பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக், கடுவொ(டு) ஒடுங்கிய தூம்புடை வாலெயிற்(று) அழலென உயிர்க்கும், அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொழுஞ்சிறைப் | 155. | புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், |
|
|
|