பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை354

நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
160.வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்(து)

ஈரிரண்(டு) ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த, யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய

165.உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்

பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்

170.பகலில் தோன்றும் இகலில் காட்சி

நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ(டு)
ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்த் தன்ன செலவினர், வளியிடைத்

175.தீயெழுந் தன்ன திறலினர், தீப்பட

உரும்இடித் தன்ன குரலினர், விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு, சின்னாள்

180.ஆவி னன்குடி அசைதலும் உரியன்;

அதாஅன்று,

திருஏரகம்

இருமூன்(று) எய்திய இயல்பினின் வழாஅ(து)
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்(டு)
185.ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்(து)
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,

190.உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்(து)