| ஆறெழுத்(து) அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்(து) ஏரகத் துறைதலும் உரியன்; அதாஅன்று, |
குன்றுதோறாடல் 195. | பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர், | 200. | நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகத் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர, விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி | 205. | இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ | 210. | மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன், கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், குழலன், கோட்டன், குறும்பல் இயத்தன் | 215. | தகரன், மஞ்ஞையன், புகரில் சேவல்அம் கொடியன், நெடியன், தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் | 220. | முழுவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோ றாடலும் தின்றதன் பண்பே: அதாஅன்று, |
|
|
|