பழமுதிர்சோலை | சிறுதினை மலரொடு விரைஇ, மறிஅறுத்து, | | 225. | வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும், வேலன் தைஇய வெறிஅயர் களனும், காடும், காவும், கவின்பெறு துருத்தியும், | | 230. | யாறுங், குளனும், வேறுபல் வைப்பும், சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும், மன்றமும், பொதியிலுங், கந்துடை நிலையினும் மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர, நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் | | 235. | குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து, வெண்பொரி சிதறி, மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொ(டு) விரைஇய தூவெள் அரிசி | | 240. | சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி, நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி, | | 245. | நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி, இமிழிசை அருவியொ(டு) இன்னியம் கறங்க, உருவப் பல்பூத் தூஉய், வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக், குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க | | 250. | முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப், பலவுடன் கோடுவாய் வைத்துக், கொடுமணி இயக்கி, ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி, வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட | | 255. | ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே, |
|
|