| ஆண்டாண் டாயினும் ஆக, காண்தக முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக், கைதொழூஉப் பரவிக், காலுற வணங்கி, நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை |
| 260. | ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப, அறுவர் பயந்த ஆறமர் செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ! |
| 265. | இழையணி சிறப்பிற் பழையோள் குழவி! வானோர் வணங்குவில் தானைத் தலைவ!, மாலை மார்ப! நூலறி புலவ! செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! |
| 270. | மங்கையர் கணவ! மைந்தர் ஏறே! வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ! குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து, விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! |
| 275. | அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக! நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள! அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்! மண்டமர் கடந்தநின் வென்றா(டு) அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்! |
| 280. | பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்! சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி! போர்மிகு பொருந! குரிசில்! எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி, ஆனாது நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் |
| 285. | நின்னடி உள்ளி வந்தனன், நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்!எனக் குறித்தது மொழியா அளவையில், குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி, |
| 290. | அளியன் தானே; முதுவாய் இரவலன் |