| வந்தோன், பெருமநின் வண்புகழ் நயந்தென இனியவும், நல்லவும் நனிபல ஏத்தித், தெய்வம் சான்ற திறல்விளங்(கு) உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி, | | 295. | அணங்குசால் உயர்நிலை தழீஇப், பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்(து) இளநலம் காட்டி, அஞ்சல் ஓம்புமதி, அறிவல்நின் வர(வு)என அன்புடை நன்மொழி அளைஇ, விளிவுஇன்(று) இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்(து) | | 300. | ஒருநீ யாகித் தோன்ற, விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்மதி, பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி, அகில்சுமந்(து) ஆரம் முழுமுதல் உருட்டி, வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு | | 305. | விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர்இறால் சிதைய,நன்பல ஆசினி முதுசுளை கலாவ, மீமிசை நாக நறுமலர் உதிர, ஊகமொடு மாமுக முகக்கலை பனிப்பப், பூநுதல் | | 310. | இரும்பிடி குளிர்ப்ப வீசிப், பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப், பொன்கொழியா, வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் | | 315. | கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரியக் கேழலொ(டு) இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம் | | 320. | பெருங்கல் விடர்அளைச் செறியக், கருங்கோட்(டு) ஆமா நல்ஏறு சிலைப்பச், சேண்நின்(று) இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. |
திருச்சிற்றம்பலம் திருமுருகாற்றுப்படைமுற்றிற்று
|