பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை36

53.

எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன்; - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று. 

10

 

54.

ஒன்றே நினைந்திருந்தேன்; ஒன்றே துணிந்தொழிந்தேன்;
ஒன்றையென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான், திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற்(கு) ஆளாம் அது. 

11

 

55.

அதுவே பிரான் ஆமா(று) ஆட்கொள்ளு மாறும்
அதுவே; யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. 

12


53. அ. சொ. பொ.: ‘ஈசன் - சிவன்’ என்பது முன்னைப் பாட்டின் உரையிலும் கூறப்பட்டது. ‘மனத்துக்கு’ என்பதில் அத்துச்சாரியைத் தொகுக்கப்பட்டது. வைப்பு - சேம நிதி. “அவனையே பிரானாகக் கொண்டேன்’ என ஏகாரம் விரித்து, மாறிக் கூட்டுக. பிரான் -தலைவன்; ஆண்டான். ‘கொள்வது’ என்பது பொதுப்பட அத்தொழிலை உணர்த்திநின்றது. உம்மை, வினையெச்ச விகுதி. எனக்கு அரியது ஒன்று உண்டே’ என்க. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய வினா.

54. அ. சொ. பொ.: நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். ‘ஓழி’, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ள டைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் ‘அவ்வொன்றே’ எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத் தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலை யசை. ‘அவ்வொன்றே ஆளாம் அது’ என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.

55. அ. சொ. பொ.: முதற்கண் “அதுவே” என்றது, மேல், “உலகெலாம் ஆள்விப்பது” என்றதையும், இடைக்கண், “அதுவே” என்றது “பிறப்பறுப்பது” என்றதனையும் ஏற்புழிக் கோடாலால் சுட்டி நின்றது. இனி - இப்பொழுது. ‘அதுவே என அறிந்தோமானால்’ என்க. ‘அதுவே தகவு’ என முடிக்க, தகவு - தகுதி; தன்மை, பனிக்கு - பனிக்காலத்திற்கு ஆற்றாமல். அணங்குகின்ற - வாடுகின்ற. கண்ணி - முடிமாலை, ‘பனிக் காலத் திற்கு ஆற்றாது வாடுகின்ற’ என்றது, கொன்றை மலரைக் குறித்தவாறு. அது கார்காலத்தில் மட்டுமே பூப்பது. “கண்ணி கார்நறுங் கொன்றை”1 என்ற பழம் பாடலைக்


1. புறம் - கடவுள் வாழ்த்து