56 | தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர்; - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லே;பாவந் தான். | | 13 |
காண்க. நுதல் - நெற்றி. தனிக் கண் - ஒற்றைக் கண். ‘அங்கும்’ என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. அல்லாக்கால், “அங்கு” என்பது நின்று வற்றும். இது சிவனது தகைமையைப் புகழ்ந்தவாறு 56. அ. சொ. பொ.: தகவு - தகுதி; நடுவு நிலைமை. அஃதாவது, பிறர்க்கு வரும் துன்பத்தையும் தமக்கு வரும் துன்பம் போன்றதாகவே உணரும் தன்மை. “தாம்” என்றது, ‘யாரேனும்’ என்றபடி. தார் - கொன்றைத்தார். அகலம் - மார்பு. எனவே, ‘சிவனது மார்பு’ என்றதாயிற்று. ‘அதனை மலைமகளைச் சாரத் தனிமையில் புகவிடுதல் பொல்லாது’ என்க. பொல்லாது தீங்கு. தீங்கிற்கு ஏதுவாவதனைத் ‘தீங்கு’ என்றது உபசார வழக்கு. கண்டீர், முன்னிலை யசை. ‘தீங்கிற்கு ஏதுவாவது யாது’ எனின், ‘அவனது மார்பில் மிகத் தீங்கு செய்ய ஊர்ந்து கொண்டிருக்கின்ற பெரிய பாம்பு அவள் மேலே என்றாவது ஒரு நாள் தாவியே விடும். அதனால், தகவுடையோர்க்கு அது பெண் பாவமாய் முடியும்’ என்பதாம் அடர்தல் - தீங்கு செய்தல். தான். அசை. எல்லாம் அறிந்திருந்தும் அம்மையார் பெருமானை நகையாடிப் புகழ்தற் பொருட்டு ஒன்றும் அறியாதார்போல நின்று இங்ஙனம் கூறினார்; பத்தி பரவசத்தால். ‘பாம்பு முதலிய வற்றுள் எதுவும் அவனையும் ஒன்றும் செய்யாது; அவளையும் ஒன்றும் செய்யாது; அவ்விருவரது தன்மையும் உலகர் தன்மையின் முற்றிலும் வேறானதே’ என்பது கருத்து. இதுவும் நிந்தாத் துதி. வாள்வரி யதளதாடை; வரிகோ வணத்தர்; | மடவாள்த னோடும் உடனாய் | நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் | உளமே புகுந்த அதனால் | கோளரி, உழுவையோடு, கொலையானை, கேழல் | கொடுநாக மோடு, கரடி, | ஆளரி நல்ல நல்ல; அவைநல்ல; நல்ல | அடியா ரவர்க்கு மிகவே.1 |
என அருளிச்செய்த மெய்ம்மைத் திருமொழியைக் காண்க.
1. திருமுறை - 2. 85.6.
|