57. | தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான், தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்; - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானைநினைந்து | | 14 |
58. | நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார்; - நினைந்திருந்து மின்செய்வான் செஞ்சடையாய்; வேதியனே என்கின்றேற்(கு) என்செய்வான் கொல்லோ இனி. | | 15 |
59 | இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்; இனியோர் இடரில்லோம், நெஞ்சே; - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண். | | 16 |
57. அ. சொ. பொ.: ‘நீள் நாகத்தானை நினைந்தமையால், தனி நெஞ்சம், தானே தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளுதற் பொருட்டுத் தானே தனக்குப் பெருஞ்சேமத்தைச் செய்து கொள்கின்றது’ என்க. ‘அவனை நினைப்பது ஒன்றே உயிர்க்குப் பாதுகாப்பாவது? என்பதும், ‘எம் நெஞ்சம் அதனைத் தானே தெரிந்து கொண்டு நினைக்கின்றது’ என்பதும் கூறியவாறு. தனி நெஞ்சம் - துணையற்ற நெஞ்சம். சேமம் - பாதுகாவல். ஆல், அசை. ‘அகம் பூணாற் பொலியாநிற்க’ என்க. ஆகம் - மார்பு. பூண் - அணிகலம். ‘பொலியாநிற்க நீள் நாகத்தை உடையான்’ என்றது, ‘நீள் நாகமே பூணாக அகம் பொலிய’ என்றபடி. 58. அ. சொ. பெ.: நீள் மலர் - மிக்க மலர். புனைந்தும் - அலங்கரித்தும். ‘செய்’, உவம உருபு. வான் - உயர்ந்த. இனி - இப்பொழுது. “என் செய்வான்” என்பதில், ‘செய்தல்’ என்னும் பொதுவினை, ‘தருதல்’ என்னும் சிறப்பு வினைப் பொருட் டாய் நின்றது. கொல், அசை. 59. அ. சொ. பொ.: ‘இறைவன் சிவன்’ என்பது மேலேயும்1 கூறப்பட்டது. “இறைவன் அருள் சேர்ந்தோம்” என்பதை முதலில் வைத்து, அதன்பின், ‘ஆதலால்’ என்பது வருவிக்க. இனி - இப்பொழுது. ஓகாரம், சிறப்பு. ‘ஓர் கடல்’ என இயையும். வினைக்கடல் உருவகம். வினை, இங்கு ஆகாமியம். கனைத்தல் - ஒலித்தல். கனைக் கடல் - கனைத்தலை யுடைய கடல். இனிக் ககர ஒற்றை ‘விரித்தல்’ எனக் கொண்டு, ‘கனைக் கடல்’ என வினைத்தொகையாகவே உணர்த்தலும் ஆம். கனை கடல், இன
1. பாட்டு - 48.
|