பக்கம் எண் :

39அற்புதத் திருவந்தாதி

60.

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே; கைதொழுது
காண்பார்க்குங் காணலாங்; காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே; தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன். 

17


61..

அரனென்கோ! நான்முகன் என்கோ! அரிய
பரனென்கோ! பண்புணர மாட்டேன்; - முரண்அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை,
யானவனை, எம்மானை இன்று. 

18

 அடை காண், முன்னிலை யசை. இதனால் சிவன் அவரவர் தன்மைக்கு ஏற்ப நின்று அருள்புரிதல் கூறப்பட்டது.

60. அ. சொ. பொ.: “தொல் உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்” என்பதை முதலிற் கொள்க. ஆதி - முதல்; முதல்வன். முதலில் உள்ள “காண்பார்” என்பது, ‘உலகிற்கு முதல்வன் எவனும் இல்லை’ என முரணிக் கூறுவாரை. அவர்க்குக் காணலாம் தன்மையாவது, அவரவர் ‘மெய்’ எனக் கொண்ட பொருள்களாய் நின்று அவர்க்குப் பயன் தரும் தன்மை. ‘அவனின்றியாதும் இல்லை’ என்பது கருத்து. பின்னர், “தொழுது காண்பார்” என்றதனால், முன்னர் “காண்பார்” என்றது, தொழாதேகாண்பாரையாயிற்று. கை தொழுது காண்பார், தெய்வம் உண்டு’ எனப் பொதுப்பட உணர்ந்து யாதேனும் ஓர் உருவத்தில் கண்டு வழிபடுவார். அவர்க்குக் காண்டல் கூடுவதாவது, அவரவர் வணங்கும் உருவத்தில் நின்று, அவர்க்குப் பயன்தருதல். காதலால் காண்பார், ‘உலகிற்கு முதல்வன் உளன்; அம்முதல்வனாம் தன்மையை உடையவன் ‘சிவனே’ என உணர்ந்து, அதனானே அவன்பால் அன்பு மீதூரப் பெற்றுக் காண விரும்புவோர். ‘அவர்கட்குப் புறத்தும் அகத்தும் ஒளியாய் வெளிப்பட்டு நின்று அருளுவான்’ என்க. “சிந்தையுளே” என்றே போயினாராயினும், “சோதியாய்” என்றதனால் ‘புறத்தும்’ என்பதும் பெறப்பட்டது. “சுடர் விட்டுளன் எங்கள் சோதி”1 என்றதற்கு, “ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பில் - ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்”2 எனப்பொருள் கூறியனமை காண்க. தோன்றும் - தோன்றுவான். ஏகாரம் தேற்றம். அரன் - பாசத்தை அரிப்பவன்.

61. அ. சொ. பொ.: அரன் - உருத்திரன். என்கோ - என்பேனோ. பரன் - பரம பதத்தில் (வைகுந்தத்தில்) இருப்பவன்; மாயோன். ‘அரியாம் பரன்’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். அப்பாடத்திற்கு, ‘பரன் -மேலானவன்’ என்க. ‘அவன் பண்பு’ எனச் சுட்டுப் பெயர். முரண் - வலிமை. தானவன், இராவணன், யான் அவன் - யானாய்


1. திருமுறை - 3.54.5

2. பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் 835.