பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை40

62.

இன்று நமக்கெளிதே! மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஓர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. 

19

 

63.

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர், பார், ஆகாயம்
அப்பொருளுந் தானே; அவன். 

20


நிற்கும்அவன். “முரண் அழிய” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ஒருவனாய் நில்லாது, மூவராய் நிற்பவனை ‘ஒரு பண்பு உடையவனாக உணர்தல் எங்ஙனம்’ என்ற படி. ‘ஒருவன் மூவராதல் கூடாமையின் அம்மூன்றும் ஓரோர் காரணம் பற்றிக் கொண்ட கோலமேயாக, அவனது உண்மை யியல்பு வேறு’ என்பது கருத்து. அஃது “ஒரு நாமம், ஒருருவம், ஒன்றும் இன்றி”1 மெய்யறிவின்பமே உருவாய் இருத்தலாம். எனவே, சிவனது தன்னியல்பும், பொது வியல்பும் கூறிய வாறாம். பொதுவியல்பு கருணை காரணமாகக் கொள்ளப் படுவது.

62. அ. சொ. பொ.: “இன்று நமக்கு எளிதே” என்பதை இறுதியிற் கூட்டி, ‘எளிதே - எளிதோ’ என உரைக்க. அன்றும் - முயன்று தேடிய அன்றும். எனவே, ‘இன்று அளப்பரியனாதல் சொல்ல வேண்டா’ என்பதாம். ‘என்றும் மூவா ஓர் மதியான்’ என்க. மூத்தல் - வளர்தல். “ஓர் மதி” என்றது, ‘அதிசயத் திங்கள்’ என்றபடி. ‘மூத்த ஏழ் உலகங்கள் என்க. ‘மூத்த உலகு’ என்பதை, ‘தொல்லுலகம்’ என்றவாறாகக் கொள்க. “நமக்கு” என்றது, ‘எளியராகிய நமக்கு’ என்றவாறாதலைப் படுத்தல் ஓசையாற் கூறிக் காண்க.

‘சிவனை உள்ளவாறுணரும் அறிவை யடைதல் எளிதன்று’ என்றபடி

63. அ. சொ. பொ.: “அவன்” என்பதை முதலில் வைத்து, ‘அவனது இயல்பைக் கூறுமிடத்து’ எனப் பொருள் விரிக்க. அறிவான் - உயிர்களுக்கு அறிவிக்கற்பாலனவற்றை அறிபவன். அறிவிப்பான் - அறிந்தவாறே அறிவிப்பவன். அறிவாய் அறிகின்றான் - அறிவித்தபின் அவ்வாற்றால் உயிர்கள் அறியும் பொழுது தானும் அவற்றது அறிவோடு உடன்நின்று அறிகின்றவன். ‘இறைவன்’ உயிர்கட்குச் செய்வது காட்டும் உபகாரம் மட்டும் அன்று; காணும் உபகாரமுங்கூட’ என்பதை விளக்கச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரச் சிற்றுரையில் இவ்வடிகள் எடுத்துக் காட்டப்பட்டமை காண்க. அறிக்கின்ற - அறியப்படுகின்ற. விரி சுடர்,


1. திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 1