64. | அவனே இருசுடர்,தீ, ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்,காற்(று) ஆவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து. | | 21 |
65. | வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ! - வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை. | | 22 |
66. | பிறையும், புனலும், அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க்(கு) ஆட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது. | | 23 |
கதிரும், மதியும், தீயும். “அப்பொருள்” என்றது, ‘மெய்ப்பொருள் அல்லாத வேறு பொருள்’ என்றதாம். “அவன்” என்றது, பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்தது. 64. அ. சொ. பொ.: இரு சுடர் கதிரும், மதியும். புவி - பிருதிவி; மண். புனல் - நீர். இயமானன் - எசமானன்; உயிர். அட்ட மூர்த்தி, எட்டுரு உடையவன். உம்மை எதிரது தழுவிய எச்சம். இஃது அவனது பொது நிலை. ஞானமயன் - அறிவே வடிவாய் உள்ளவன், இஃதே அவனது உண்மை நிலை. ‘உலகுயிர்கட்கு அட்டமூர்த்தியுமாய், வீட்டுயிர்கட்கு ஞான மயனாகி வந்து நின்றானும் ஆவன்’ என்க. ‘ஆவன்’ என்பது சொல்லெச்சம். சிவனது பொது நிலை, உண்மை நிலை இரண்டையும் கூறியவாறு. 65. அ. சொ. பொ.: “வந்தோர்” என்பது முதலாகத் தொடங்கி, ‘பிறைக்கண்’ என ஏழாவது விரித்து உரைக்க. ‘வந்த’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. நீர் - நீர்மை; தன்மை. கொள்வது உட்கொள்வது; விழுங்குவது. ‘ஒக்கும் சிந்தை’ என இயையும். சிந்தை - எண்ணம். அது, பகுதிப் பொருள் விகுதி. காண்மின் - குறிக்கொண்டு நோக்குமின். ஒகாரம், சிறப்பு. ‘அடைக்கலமாக வந்து அடைந்த திங்களை நினையாது விட்டு விடாதீர்’ என்றபடி. சார்ந்தாரைக் காக்கும் சிவனது இயல்பை அறியாதார் போன்று அறிவித்தவாறு. 66. அ. சொ. பொ.: அனல் அரவு - அனலுகின்ற; சீறுகின்ற பாம்பு. பிறை முதலிய அடையாளங்களைக் கூறியது, ‘இறைவர் சிவபிரான்’ என்பது உணர்த்துதற்கு. இனி, அவை அவரது
|