பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை42

67.

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று)!
இதுவன்றே என்றனக்(கு)ஒர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற(து) இங்கு. 

24


கைம்மாறுகருதாத கருணைக்கும் அடையாளங்கள் ஆதலை உணர்க. அவற்றால், ‘அவர்’ எமக்கு இரங்காதொழியார்’ என்னும் குறிப்பும் தோன்றிற்று. ‘இரங்காரேனும்’ என்பதற்கு, மேல் “இடர்களையாரேனும்” என்புழி உரைத்தாங் குரைக்க. “கறை மிடற்ற எந்தையார்” என்றது, ‘அவர்’ என்னும் சுட்டளவாய் நின்றதேனும், அதனாலும் அவரது கருணை மிகுதி குறிக்கப்பட்டதாம். அடுக்கப் பலகாலும் நினைத்தலைக் குறித்தது. இருக்கும் - அமைதியுற்றிருக்கும். ‘துள்ளித் துடியாது’ என்றபடி.

. . . . . . . . . “உன் அருள்நோக்கி,
இரைதேர் கொக்கொத்து இரவு பகல்

ஏசற்றிருந்தே வேசற்றேன்,”

“இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்

என்றென்று ஏமாந் திருப்பேனை.”

“நல்கா தொழியான் நமக்கென்று உன்

நாமம் பிதற்றி.”1

என்னும் திருமொழிகளைக் காண்க. ‘தயா’ என்பதில் அகரத் திற்கு ஐகாரம் போலியாய் வந்து, “தையா” என நின்றது. யூயா உள்ளம் - தயவை - அருளை விரும்புகின்ற உள்ளம். “இது” என்றது, எடுத்தல் ஓசையால், “பித்துக் கொண்டதாகிய இது’ எனப்பொருள் தந்தது. ‘உள்ளமாகிய இது, - ஆட்பட்டு விட்டோம்; இனி அவர் செய்வது ‘செய்க’ - என்று என்று அமைதியுற்றே யிருக்கின்றது என்க.

67. அ. சொ. பொ.: “மீண்டு” என்பதை அடுக்கிக் கூறி, ‘மீண்டும் மீண்டும்’ ஆய்கின்ற என் சிந்தனையில் மின்னும் சுடர் உருவாய் (ப் புகுந்து) இன்னும் சுழல்கின்றதாகிய இது அன்றே ஈசன் இங்குச் செய்வது! அவன் திருவுருவத்தின் இயல்பும் இதுவன்றே! னுன்றனக்கு ஓர் சேமம் ஆவதும் இது வன்றே!’ என இயைந்துரைத்துக் கொள்க.

இடைவிடாது நினைப்பவர் உள்ளத்தையே சிவன் தனக்குக் கோயிலாகப் புகுந்து, ஒளியுருவாய் விளங்குவான்; அங்ஙனம் அவன் விளங்கப் பெறுதலே உயிர்க்கு ஆக்கமாவது’ என்பதாம். “சிந்தனைக்கு” என்பது உருபு மயக்கம்.


1. திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 5, 7, 10.