பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை362

(“மறு இல்” என்றதனானே, வள்ளி நாயகியார்க்குக் கணவன்’ என்பது பெற வைத்தமையால் முருகன் தனது இச்சா சத்தி கிரியா சத்திகளால் உலகை ஐந்தொழிற்படுத்தருளுதல் குறிப்பால் உணர்த்தப்பட்டதாம்.

அடி-10, 11: மரர்அத்து பூந்தண்தார் புரளும் மார்பினன் - செங்கடப்ப மரத்தினது பூவால் ஆகிய, குளிர்ந்த தார் புரளு கின்ற மார்பினை உடையவன். பராரை - பருத்த அடிமரம், உருள் தேரினது உருளைப் போலும் (தார்.)

அடி-9, 10: கானத்து இருள்படப் பொதுளிய மரா - காட்டிடத்து இருள் உண்டாகும்படி தழைத்த மரா மரம்.

அடி-9,: தலைப் பெயல் தலைஇய கானம் - முதல் மழை பொழிந்து விட்டகாடு. தண் நறுங் கானம் - குளிர்ந்த நறுமணம் கமழ்கின்ற காடு.

அடி-8, 9: வியம்பில் வள் உறை சிதறி தலைப் பெயல் தலைஇய - வானத்தின்கண் வளமான துளிகளைச் சிதறி, முதல் மழை பொழிந்து விட்ட.

அடி-8: வாள் போழ் விசும்பு - ஞாயிறு, திங்கள் முதலிய வற்றின் ஒளிகள் இருளைக் கிழிக்கின்ற வானம்.

அடி-7: கார் கோள் முகந்த கமஞ்சூல் மா மழை (9 - தலைப் பெயல் தலைஇய) கடல் நீரை முகந்த நிரம்பிய கருப்பத்தைக் கொண்ட கரிய மேகங்கள் (முதல் மழையைப் பொழிந்து விட்ட)

அடி-43, 44: காந்தள் பூ பெருந்த கண்ணி மிலைந்த சென்னியன் - காந்தட் பூவால் ஆகிய பெரிய, குளிர்ந்த முடி மாலையைச் சூடிய தலையை உடையவன். சுடர்க் காந்தட் பூ - நெருப்புப் போலும் செங்காந்தட் பூ. சுரும்பும் மூசாக் காந்தட் பூ - நெருப்புப் போறலின் வண்டும் மொய்க்காத காந்தட் பூ. உம்மை, ‘பிற குற்றங்கள் அணுகாமையே யன்றி’ என இறந்தது தழுவிற்று. இனி, ‘பிற குற்றங்களை விலக்குதல் கூடுமாயினும் வண்டு மூசுதலை விலக்குதல் அரிதாகலின் அக்குற்றமும் இல்லது’ எனச் சிறப்பும்மையாகக் கொள்ளுதலும் ஆம்.

அடி - 42 : மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து(க் காந்தட் பூ) - மிக உயர்ந்திருத்தலில் மரம் ஏறுதலில் வல்ல குரங்குகளும் உச்சி வரையில் ஏறி அறியாத மரங்கள் நிறைந்த சாரலின்கண் (பூத்த காந்தட் பூ)

அடி-12: மால் வரை நிவந்த வெற்பில் - பெரிய மூங்கில் வளர்ந்த மலையில் (உள்ள 41 சோலை), சேண் உயர் - வானுல. களவும் உயர்ந்த (மலை