பக்கம் எண் :

363திருமுருகாற்றுப்படை

அடி- 41, 39: சூர் அர மகளிர் பலர் உடன் ஆடும் சோலை (அடுக்கம்) - மக்களாய் உள்ளார்க்கு அச்சம் தோன்றும் தெய்வ மகளிர் பலர் ஒன்று சேர்ந்து விளையாடுகின்ற சோலையினை யுடைய (சாரல்)

அடி-40: சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி (ஆடும் சோலை) - அழகு விளங்குகின்ற மலையகத்து ஒலியெழும்படி பாடி (விளையாடும் சோலை). ‘அம்மகளிரது உருவம் ஈண்டுள்ளார்க்குக் கட்புலனாகாவிடினும் அவர்கள் பாடும் பாட்டின் ஒலி செவிப் புலன் ஆகும்’ என்பது கருத்து.

அடி-38, 39: கொடி பெரிது வாழிய என்று ஏத்தி (ப்பாடி) - ‘கொடி நெடுங்காலம் வாழ்க’ என வாழ்த்து முறையால் துதித்து (ப்பாடி).

அடி-38: கோழி ஓங்கிய (கொடி) - கோழியோடு உயர்ந்து தோன்றும் (கொடி; முருகன் கொடி.) அட்டு வெல் விறல் (கொடி) - கரவாது எதிர் நின்று பொருது வென்று எடுத்த, வெற்றியைக் குறிக்கும் (கொடி.)

அடி-13: கிண்கிணி கவைஇய சீறடி - சிறு சதங்கை சூழ அணிந்த சிறிய பாதங்களை உடைய (41- மகளிர்) ஒள் - ஒளி பொருந்திய (பாதம்) செ - செம்மை நிறத்தனவாகிய (பாதம்)

அடி-14: கணைக் கால் - திரண்ட கால்களை யுடைய (41-மகளிர்). வாங்கிய நுசுப்பின் - வளைந்து துவளும் இடையினையுடைய (41-மகளிர்). பணைத்தோள் - பருத்த தோளினையுடைய (41-மகளிர்). ‘மூங்கில்போலும் தோள்’ என்றும் ஆம்.

அடி-15: கோபத்து அன்ன துகில் - ‘இந்திர கோபம்’ என்னும் பூச்சியினது நிறத்தோடு ஒத்த சிவந்த நிறத்தையுடைய உயர்ந்த புடைவையை உடைய (41-மகளிர்). தோயா (த் துகில்) - செயற்கையாக ஏற்றப்படாது இயல்பாகவே சிவந்த (துகில்) பூ (பூக்கள் பொறிக்கப்பட்ட (துகில்)

அடி-16: பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல் - பல மணிகளைக் கோத்த வடம் ஏழால் அமைந்த ‘மேகலை’ என்னும் அணிகலனையுடைய பிருட்டங்களையுடைய (41-மகளிர்). முன்னழகிற்கு வேறுபல இடப்படும் ஆகலின் மேகலை பின்அழகிற்கே இடப்படுவது ஆகும். இம் மணிவடக் கோப்பு வடத்தின் எண்ணிக்கை பற்றி வேறு வேறு பெயரால் சொல்லப் படுகின்றன. அதனை,

எண்கோவை காஞ்சி; எழுகோவை மேகலை;
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்