பருமம் பதினெட்டு; முப்பத் திரண்டு விரிசிகை என்றுணரற் பாற்று. என்னும் வெண்பாவால் விளக்கினார் நச்சினார்க்கினியர். இப் பொருள் சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டுகளில் சொல்லப்பட்டது. அடி-17: கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் - சிலர் தம் கைவன்மையால் புனைந்து தோற்றுவியாத அழகாக, இயல்பாற் பெற்ற அழகினையுடைய (41-மகளிர்). ‘தெய்வ மகளிரது அழகு இயற்கையானது’ என்றபடி. ‘கவினாக’ என ஆக்கம் வருவிக்க. அடி-18: நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை - நாவலோடு பொருந்தி பொன்னால் (நாவல் - சம்பு. அதனைப் பொருந்திய பெயர் சாம்பூநதம், ‘பொன் நால்வகைத்து’ என வகுத்து, ‘அவற்றுள் இப்பொன் சிறந்தது’ என்பர். “பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புநதம்1 என்றதும் காண்க.) செய்யப்பட்டனபோன்று மிக்கு விளங்கு கின்ற அணிகலன்களையுடைய (41-மகளிர்) அடி-19: சேண் இகந்து விளங்கும் மேனி - நெடுந் தொலைவு கடந்தும் விளங்குகின்ற நிறத்தையுடைய (41-மகளிர்) செயிர்தீர் - குற்றம் அற்ற (மறு வற்ற மேனி.) அடி-20: துணையோர் ஆய்ந்த ஓதி - ஆயத்தார் உற்று நோக்கி மெச்சும் தலை மயிரில். இணை - எல்லாம் ஒன்று போல முனை ஒத்துக் கூடிய (தலை மயிர்). ஈர் - இயற்கையில் நெய்ப்பசையையுடைய (தலைமயிர்.) அடி-22: பைந் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - பசுமையானகாம்பை உடைய குவளைப் பூவினது இதழ்களைத் தனித் தனியாகக் கிள்ளி எடுத்து. அடி-21: செங்கால் வெட்சிச் சிறு இதழிடை இடுபு - சிவந்த காம்பையுடைய வெட்சிப் பூக்களின் இடையே இட்டு. (சீறிதழ் - ஆகுபெயர்.) அடி-23: தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திருமகள் வடிவாகச் செய்யப்பட்ட ‘உத்தி’ என்னும் தலைக்கோலத்துடனே, வலம் புரிச் சங்கு வடிவாகச் செய்யப் பட்ட தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்திலே வைத்து. அடி-24, 25: திலகம் தையஇய பகுவாய் மகரம் தாழ மண்ணுறுத்து - திலகம் இட்டு அழகுபடுத்தப்பட்ட நெற்றி யிலே, பிளந்த வாயையுடைய சுறாமீன் வடிவாகச் செய்யப் பட்ட
1. திருவள்ளுவ மாலை - 36.
|