பக்கம் எண் :

365திருமுருகாற்றுப்படை

தலைக்கோலத்தைத் தொங்கவிட்டு அழகு படுத்தி. தேம் கமழ் - மணம்கமழ்கின்ற (திருநுதல்)

அடி-26: துவர முடித்த முச்சி - முற்றப் பின்னிப் பின் முடியாக முடித்த கொண்டையில். துகள் அறும் - குற்றம் அற்ற (முச்சி)

அடி-27: சண்பகம் செரீஇ - சண்பகப் பூவைச் செருகி. பெருந்தண் - பெரிய, குளிர்ந்த (சண்பகம்)

அடி-27, 28: மருதின் பூ இணர் அட்டி - மருத மரத்தினது பூக்கொத்தினை (ச் சண்பகத்தின் மேலே தோன்ற) வைத்து. கருந்தகட்டு உளைப் பூ - புறத்தில் கரிய புற இதழினையும், அகத்தில் கேசரத்தினையும் உடைய பூக்களை உடைய (மருது). ஒள் - ஒளி பொருந்திய (இணர்).

அடி-29, 30: கிளைக் கவின்று எழுதரு செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ - காம்பினின்றும் அழகாய் எழுகின்ற (அம்மருத) சிவந்த அரும்புகளை இணைத்துக் கட்டிய மாலையை (க் கொண்டையைச் சூழ) வளைத்து. கீழ்நீர் - நீர்க்கீழ் (இட்டுவைத்து எடுத்த அரும்பு. பறித்த அரும்பை நீரில் இட்டு வைப்பின் சிவப்புப் பின்னும் மிக அழகு மிகும்.)

அடி-30, 31, 32: வண் காது துணைத் தக நிறைந்த பிண்டித் தளிர் ஆகம் திளைப்ப - வளமான காதுகளில் இரண்டும் ஒருபடியாய் ஒத்துத் தோன்றும்படி வைக்கப்பட்டு நிறைந்த அந்த அசோகந் தளிரே மார்பிலும் அணிகலங்களுக்கு இடையே பொருந்தி அசையச் சேர்த்து. (‘சேர்த்து’ என ஒரு சொல் வருவிக்க. ‘அந்த’ என்றது சாதி பற்றி.)

அடி-32, 33: திண் காழ் நறுங் குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை - திண்ணிய, வயிரத்தையுடைய, நறிய சந்தனக் கட்டையை உரைத்ததனால் உண்டாகிய அழகிய நிறத்தை யுடைய சாந்தினை.

அடி-35: முலைக் கொட்டி - கொங்கைகளின்மேல் அள்ளியிட்டு.

அடி-34, 35: கோங்கின் குவி முகிழ் - கோங்க மரத்தினது குவித்த அரும்புபோலும் (முலை) இள - இளமையான (முலை).

அடி-34: தேம் கமழ் மருது இணர் கடுப்ப - மணம் கமழ் கின்ற மருதம் பூவின் கொத்துப்போலத் தோன்றும்படி. (கொட்டி).

அடி-35, 36: வேங்கை விரி மலர் நுண் தாது அப்பி - (சந்தனச் சாந்து புலர்வதற்கு அதன்மேலே) வேங்கை மரத்தில் மலர்ந்த மலரினது நுண்ணிய மகரந்தத்தை அப்பி