‘குதிரை முகம் உடைய அசுரர்கள்’ என்றதை ஒட்டி, ‘அவ்வாறான உடல் அமைப்பையுடைய ஒரு பூதம் நக்கீரரை மலைக்குகையில் அடைத்தபொழுது அதனினின்றும்’ விடுபட வேண்டியே அவர் திருமுருகாற்றுப் படையைப் பாடினார், என்ற வரலாறு சீகாளத்திப் புராணத்தில் கூறப்பட்டது. அப்பூதத்தின் பெயர் ‘கற்கி முகாசுரன்’ என்பதாகச் சொல்வது உண்டு, கற்கி - குதிரை. அடி-60: மறு இல் கொற்றத்து - குற்றம் இல்லாத வெற்றியையும். (‘கொடியோரை அழித்தல் குற்றம் அன்று’ என்பது குறித்தபடி.) அடி-61: எய்யா நல் இசைசேய் - ஒருவராலும் அளந் தறியப்படாத நல்ல புகழையும் உடைய சேயோன். (முருகன்.) அடி-51: பேய் மகள். அடி-53: கருந்தலை அடி-54: கையின் ஏந்தி, அடி-55: தோள் பெயரா (பெயர்த்து) அடி-56: துணங்கை தூங்க - ‘துணங்கை’ என்னும் கூத்தினை ஆடும்படி (60. மா முதல் தடிந்த) நிணந்தின் வாயள் - (பிணங்களின்) நிணங்களை எடுத்துத் தின்கின்ற வாயினை உடையளாய் (தூங்க) வாயார், முற்றெச்சம். அடி-47: உலறிய கதுப்பின் - எண்ணெய் இன்றிக் காய்ந்த தலைமயிரினையும், பிறழ் பல் பேழ்வாய் - ஒழுங்கில்லாது பலவாறாகப் பிறழ்ந்து காணப்படும் பற்களையுடைய பெரிய வாயையும். அடி-48: சுழல் விழிப்பசுங்கண் - (எத்திசையையும் வெகுண்டு நோக்குதலால்) சுழலுகின்ற விழியினையுடைய பசிய கண்ணினையும் (‘கண்’ என்னும் உறுப்பில் உருவத்தைக் கவர்வதே ‘விழி’ எனப்படும்). சூர்த்த நோக்கின் - (அக்கண் களால்) யாவரையும் அச்சுறுத்துகின்ற பார்வையினையும். அடி-49, 50: கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெரு முலை அலைக்கும் காதின் - பிதுங்கிய கண்களையுடைய கூகைகளை (கோட்டான்களை) முடிந்து விட்டுத் தூங்குதலால் பெரிய கொங்கைகளை வருந்தப் பண்ணுகின்ற காதினையும், பிணர் மோட்டு - ‘சொரசொர’ என்னும் உடம்பினையும், அடி-51: உரு கெழு செலவின் - கண்டவர்கள் அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய (51-பேய்மகள்.) அஞ்சு வரு - கண்டவர்க்கு அஞ்சுதல் வருதற்குக் காரணமான (பேய் மகள்)
|