பக்கம் எண் :

369திருமுருகாற்றுப்படை

அடி-67: செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி - (மாற்றரசர் வந்து புரியும்) போரினை ஏற்க விரும்பி, (அதற்கு அடையாளமாக) உயரத் தூக்கிய, வானளாவ உயர்ந்து பறக்கும் நீண்ட கொடியின் பக்கத்திலே கட்டப் பட்ட. (“கொடி.” என்பது 68 “பாவை” என்பதனுடன் ஏழாம் வேற்றுமைத் தொகைபடத் தொக்கது)

அடி-68: வரிப் புனை பந்தொடு பாவை தூங்க - நூலால் வரிந்து செய்த பந்தையுடைய பாவை (அறுப்பார் இன்மை யால்) தூங்கியே கிடக்க. (மாற்று வேந்தரை மகளிராக வைத்து இகழ்தலைக் காட்டும் அடையாளமாகக் கொடியின் பக்கத்தில் பந்தாடுவாளைப் போலப் புனையப்பட்ட பாவை ஒன்று தூங்க விடப்படும். மாற்று வேந்தர் வந்து முற்றுகையிடக் கருதினாராயின் அந்தப் பாவையை முதலிலே அறுத்து வீழ்த்து தல் வேண்டும்.) அங்ஙனம் ஒருவரும் வந்து அதனை அறுத்து வீழ்த்தாமையால் அது தூங்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆகவே,

அடி-69: பொருநர் தேய்த்த போர் அரு வாயில் - போர் செய்பவரை இல்லையாக்கிய காரணத்தால் போர் இல்லாத வாயிலையும்

அடி-70: திரு வீற்றிருந்த - திருமகள் சிறப்புடன் இருக்கப் பெற்றதும். தீது தீர் நியமத்து - குற்றம் அற்ற கடைத் தெருக் களையும்.

அடி - மாடம் மலி மறுகின் மேல் மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய. கூடல் குடவயின் - மதுரை மாநகரத்திற்கு மேற்கில் உள்ள (77 குன்று)

அடி-76: அம் சிறை வண்டின் அரிக்கணம் - அழகிய சிறகினையுடைய வண்டுகளாகிய இசைபாடும் கூட்டம்.

அடி-70: இரு சேற்று அகல் வயல் - கரிய சேற்றினை யுடைய அகன்ற வயல்களில். விரிந்து வாய் அவிழ்ந்த - முறுக்கு நீங்கி மலர்ந்து, பின்பு வாய் நன்கு மலர்ந்த.

அடி-73: தாமரைத் துஞ்சி - தாமரை மலர்களில் (பகலில் வீழ்ந்து, மாலையில் அவை கூம்பிவிட்டமையால் இரவெல்லாம் அவற்றினுள்ளே) உறங்கிக் கிடந்து. முள் தாள் - முள்ளை யுடைய தண்டினை உடைய (தாமரை)

அடி-73, 74: வைகறை நெய்தல் ஊதி - விடியற் காலையில் (பறந்து சென்று) நெய்தற் பூவில் வீழ்ந்து ஊதி. கள் கமழ் - தேன் மணக்கின்ற (நெய்தல்). எல் பட - ஞாயிறு தோன்றியவுடன்.

அடி-75, 76, 77: சுனை மலர் ஒலிக்கும் குன்று - சுனையின் கண் மலர்ந்த மலர்களிலே வீழ்ந்து ஆரவாரிக்கின்ற திருப்பரங்குன்றம். கண்போல் மலர்ந்த - சுனைகளினுடைய கண்களைப் போல விளங்க