பக்கம் எண் :

373திருமுருகாற்றுப்படை

இருகைகளும் மேல், “மாயிருள் ஞாலம் மறு வின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று” எனக் கூறிய முகத்திற்கு உரியன.)

அடி-111, 112, 113: ஒருகை அங்குசம் கடாவ ஒரு கை நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது - மற்றொருவகை யானையைச் செலுத்துதற்கு அங்குசத்தைப் பயன்படுத்த, அதற்கு இணையான மற்றொரு கை அழகைப் பெற்ற உடையின் மேலாய் துடையின்கண் இருத்தப்பட்டது. (வரம் வேண்டினார்க்கு அதனை வழங்க வருமிடத்து யானை மேல் வருவானாகலின், இந்த இருகைகளும் காதலின் உவந்து வரங்கொடுக்கும் முகத்திற்கு உரியனவாம்.)

அடி-111, 112: இரு கை ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப - இரண்டு கைகளில் ஒன்று வியப்பைத் தருகின்ற கரிய கேடகத்தையும், மற்றொன்று வேற்படையையும் வலமாகச் சுழற்ற. (சுழற்றுதல் வேள்விகளை அழிக்க வரும் அசுரரை நோக்கியாகலின் இந்த இரு கைகளும் வேள்வி ஓர்க்கும் முகத்திற்கு உரியனவாம்.

அடி-112, 113, 114: ஒரு கை மார்பொடு விளங்க, ஒரு கை தாரொடு பொலிய - மற்றொரு கை, மெய்யுணர்வு வேண்டி னார்க்கு, அதனைச் சொல்லாமல் சொல்லும் வகையில் குறிக்கும் அடையாளமாக மார்பின்கண் பொருந்தி விளங்க, அதற்கு இணையான மற்றொரு கை மார்பில் புரளும் தாரொடு சேர்ந்து பொலிந்தது. (மெய்யுணர்வாவது “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது”1 ஆதலின், இந்த இருகைகளும் “எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும் முகத்திற்கு உரியன.)

அடி-114, 115, 116: ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீ மிசைக் கொட்ப, ஒருகை இன்பாடு படுமணி இரட்ட - மற்றொரு கை, தோளில் அணிந்த வளை மேல் நீன்று கீழே கழன்று வீழ்வதுபோல விழ வேள்வித் தீக்கு மேலே உயர்த்தி ஆகுதி பண்ணுதலாலும், முத்திரை கொடுத்தலாலும் சுழல, அதற்கு இணையான மற்றொரு கை இனிய ஓசை தோன்று கின்ற பூசை மணியை இடையிடையே எடுத்து அடிக்கின்றது. (எனவே, இந்த இரண்டு கைகளும் கள வேள்வி வேட்கும் முகத்திற்கு உரியன ஆதலை அறிந்துகொள்க.

அடி-116, 117, 118: ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய - மற்றொரு கை நீல நிறத்தை உடையனவாகிய மேகங் களைத் தூண்டி மிகுந்த மழைத்துளிகளைப் பெய்விக்க. (‘பொழிவிக்க’ என்பதில் பிற வினை விகுதி தொகுக்கப்பட்டது. ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை ஆட்ட - அதற்கு இணையான மற்றொரு கை தேவ மாதர்கட்கு மண மாலையைச் சூட்ட. (இது தன்னை


1. திருக்குறள் - 355