பக்கம் எண் :

375திருமுருகாற்றுப்படை

அடி-155: புள் அணி நீள் கொடிச் செல்வனும் - பறவையை அணிந்த நீண்ட கொடியையுடைய தேவனாகிய திருமாலும்.

அடி-154: பாம்பு படப் புடைக்கும் கொடுஞ் சிறை - பாம்புகள் இறக்கும்படி அவைகளை அடிக்கின்ற வளைந்த சிறகு. பல் வரி - பல கோடுகளைப் பொருந்திய (சிறகு இத்தகைய சிறகினையுடைய புள், கருடன்.)

அடி-152: கடுவொடு ஒடுங்கிய - நஞ்சுடனே ஒளிந்துள்ள. தூம்பு உடை எயிறு - உள்துணையில் பொருந்திய பல், வால் - வெள்ளிய (எயிறு. எயிற்றினை யுடைய பாம்பு.)

அடி-153: அழல் என உயிர்க்கும் - நெருப்புப் போலப் பெருமூச்செறியும் (பாம்பு) அஞ்சு வரு கடுந் திறல் - கண்டார்க்கு அஞ்சுதல் வருதற்கு ஏதுவாகிய ஏதுவாகிய கடுமையான கொலை வன்மையையுடைய (பாம்பு)

அடி-158: மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - திரிபுரத்தை அழித்த ஆற்றல் மிக்க சீகண்ட உருத்திரனும் (இப்பெருமான் திருக்கயிலையில் எழுந்தருளியிருப்பவன்.)

அடி-157: உமை அமர்ந்து விளங்கும் - உமையம்மை உடனாக எழுந்தருளி விளங்கும் (செல்வன்) இமையா முக்கண் - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை யுடைய (செல்வன்)

அடி-155, 156: வெள் ஏறு வலவயின் உயரிய - வெள்ளிய இடபத்தை யுடைய கொடியை வலப்பக்கத்து உயர்த்திக் கொண்ட (செல்வன்) பலர் புகழ் திணி தோள் - (கணபதியும், முருகனும் ஏறி விளையாட இருத்தல் பற்றிப்) பலரும் புகழ்கின்ற ‘திண்’ என்ற தோள்களையுடைய (செல்வன்)

அடி-159: நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து - நூற்றைப் பத்தாக அடுக்கிய (ஆயிரம் ஆன) கண்களையுடைய (163 செல்வன்)

அடி-159, 160: நூறு பல் வேள்வி முற்றிய - ‘நூறு’ என்னும் எண்ணிக்கையை யுடைய பலவாகிய வேள்விகளை வேட்டு முடித்ததனால் பெற்ற (செல்வன் - செல்வத்தை யுடையவன். இது பற்றி இவன் ‘சதமகன்’ எனச் சொல்லப்படுவான்.)

அடி-160: அட்டு வெல் கொற்றத்து - அசுரர்களை அழித்து வெல்கின்ற வெற்றியையுடைய (செல்வன்)

அடி-161, 162, 163: ஏந்திய ஈர் இரண்டு மருப்பின் - வாயில் ஏந்தியுள்ள நான்கு கொம்புகளையும். எழில் நடை - அழகிய நடையினையும், தாழ் பெருந் தடக்கை - நிலத்தளவும், தாழ்கின்ற, பெரிய, வளைந்த கையையும் (தும்பிக்கையையும்) உடைய. உயர்த்த யானை எருத்தம் ஏறிய - யாவராலும் உயர்த்துச் சொல்லப்பட்ட