அடி-171: நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரோடு - ‘கதிரவர், உருத்திரர், வசுக்கள், மருத்துவர்’ என்னும் நான்கு வேறுபட்ட இயல்பினை யுடைய முப்பத்து மூவரும். (‘கதிரவர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் ஆக முப்பத்து மூவர்’ என்றபடி. இவர்களைப் பரிவாரங்களொடு கூட்டி, ‘முப்பத்து முக்கோடியினர்’ என்பர்.) அடி-172: ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் - ‘பதினெட்டு’ என்னும் எண்ணளவாக, உயர்ந்த நிலைகளைப் பெற்றவரும். (‘பதினெண் கணத்தவர்’ என்றபடி. அவராவர், ‘தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னார், கிம்புருடர், யட்சர், வித்தியாதார், அரக்கர், கந்தருவர், சித்தர் சாரணர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள், போக பூமியர்’ என்பர். இவ்வகை சிறிது வேறுபடவும் கூறப்படும். அடி-170: பகலின் தோன்றும் இகல் இல் காட்சி - பகுத்துக் காண்டலால் காணப்படுகின்ற, தம்முள் மாறுபாடு இல்லாத அறிவினையுடைய (பதினொருமூவர்.) அடி-173: மீன் பூத்தன்ன தோன்றலர் - விண்மீன்கள் வெளிப்பட்டு விளங்கினாற்போலும் தோற்றத்தை உடையராயும். அடி-173, 174: மீன் சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் - அம்மீன்களை யெல்லாம் பொருந்திக் காற்று எழுந்து வீசினாற் போலும் போக்கினை உடையராயும். அடி-174, 175: வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் - அக்காற்றினிடையே நெருப்பு ஓங்கினால் ஒத்த வலிமை யினையுடையாராயும். அடி-175, 176: தீப் பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புத் தோன்ற இடி இடித்தாற்போலும் குரலினை உடையராயும். அடி-178: அந்தரக் கொட்பினர் உடன் வந்து - வானத்தில் சுழலும் சுழற்சியினை உடையராய் உடன் வர. (“வந்து” என்பதனை, ‘வர’ எனத் திரிக்க.) அடி-176, 177: தம் விழுமிய உறுகுறை மருங்கின் பெறுமுறை கொண்மார் காண - தங்கள் விழுமிதாகிய பெரிய குறையை இவனிடத்திலே பெறும் முறையாலே பெற்றுக் கொள்வாராய்க் காணும்படி (குறையாவது, நான்முகனோடு முன்புபோலக் கூடி முதிதொழிலை இயற்ற வேண்டுதல்) அடி-179, 180: ஆவினன்குடி சின்னாள் தா இல் கொள்கை மடந்தையொடு அசைதலும் உரியன் - ‘திரு ஆவினன்குடி’ என்னும் தலத்தில் சில நாள், கெடுதல் இல்லாத கோட்பாட்டினை யுடைய தெய்வயானையாயோடு தங்கி யிருத்தலையும் தனக்கு உரித்தாக
|