நெருப்பு, நீர் என்னும் பூதங்களின் வடிவமாகும், காற்றும், வானமும் கட்புலனாளப் பொருள்கள் ஆதலின் அவற்றின் வடிவில் தீ யெழாது.) அடி-188, 187: ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் இருபிறப்பாளர் பொழுது அறிந்து - மூன்று நூல்களை ஒன்றாகப் புரித்துப் பின்பு அந்தப் புரி மூன்றினை ஒன்றாகப் புரித்தமையால் ஒன்பது இழைகளைக் கொண்டபுரி மூன்றினையுடைய நுண்ணிய பூணுலை அணிந்த, உபநயனத் திற்கு முன்னே ஒரு பிறப்பும், உபநயனத்திற்குப் பின்னே ஒரு பிறப்பும் ஆக இருபிறப்புக்களையுடைய அந்தணர்கள் வழிபாட்டிற்குரிய காலங்களைத் தெரிந்து. அடி-189: புலாராக் காழகம் புலர உடீஇ - நீரில் தோய்த்து எடுக்கப்பட்ட ஈரம் புலராத உடை, உடம்பிற்றானே புலரும்படி உடுத்து. (உலர்ந்த உடையை உடுத்தலே ஆசார மாயினும், ஈர உடையை உடுத்தலை ஆசாரமாகக் கொள்ளுதல் மலை நாட்டு வழக்கமாகுதல்.) அடி-193: விரை உறு நறு மலர் ஏந்தி - மணம் மிக்க நல்ல பூக்களைத் தாங்கி. அடி-190: உச்சிக் கூப்பிய கையினர் - தலைமேலே குவித்து வைத்த கைகளை உடையவர்களாய். அடி-191: ஆறு எழுத்து அடக்கிய கேள்வி - ‘நமக் குமாராய’ என்னும் ஆறு எழுத்துக்களைத் தன்னுள். அடக்கி யுள்ள மந்திரத்தை. (ஆறெழுத்து மந்திரத்தை வேறாகச் சிலர் கூறுவர். “நாதா குமார நம” என அருணகிரி நாதரும் இம்மந்திரத்தையே வேறோராற்றால் குறித்தார்.) அடி-191: அரு மறை - கேட்டற்கு. அரிதாய், மறைத்துச் சொல்லப்படும் (கேள்வி) அடி-192: நா இயல் மருங்கின் நவிலப் பாடி (190) தற் புகழ்ந்து (18) நுவல் - நாப் புடைபெயரும் அளவாகப் பல முறை கூறித் தன்னைப் புகழ்ந்து தோத்திரங்கள் சொல்ல. அடி-193: பெரிது உவந்து (194) ஏரகத்து உறைதலும் உரியன் - அவற்றிற் கெல்லாம் பெரிதும் மகிழ்ந்து “திருவேரகம்” என்னும் தலத்தில் எழுந்தருளி யிருந்தலையும் தனக்கு உரிமையாக உடையன். (எனவே, ‘அங்குச் சென்றாலும் அவனைக் காணலாம்’ என்பதாம்). ‘இருபிறப்பாளர், பொழுதறிந்து, புலராக்காழகம் உடீஇ, நறுமலர் ஏந்தி, உச்சிக் கூப்பிய கையினரை ஆறு எழுத்து அடக்கிய கோள்வியை நா இயல் மருங்கின் பாடித் தற்புகழ்ந்து நுவலப் பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்’ என இயைத்து முடிக்க. அடி-194: அதாஅன்று - அதுவன்றியும்.
|