பக்கம் எண் :

383திருமுருகாற்றுப்படை

அடி-208: தொடுத்த தழை - தொடுக்கப்பட்ட ‘தழை’ என்னும் உடை, சுரும்பு உண - வண்டுகள் தேனை உண்ணும் படி (தொடுத்த தழை) பெரு தண் மா - பெரிய, குளிர்ந்த, அழகிய (தழை)

அடி-209: திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திருத்த மான மணி வடங்களையுடைய பிருட்டத்தினிடத்தே பொருந்தி அசையும்படி உடுத்து.

அடி-210: மயில் கண்டன்ன மகளிரொடு - சாயலால் மயிலைக் கண்டாற்போலும் பெண் அடியார்களோடும். மடநடை பெண்மை ஒழுக்கத் தினை உடைய (மகளிர்)

அடி-217: நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு - யாழின் நரம்பு ஒலித்தாற் போல ஒலிக்கும் இனிய குரலை யுடைய பாடல் மகளிர் கூட்டத்தோடும்.

அடி-211: செய்யன - செஞ்சாந்து பூசிச் சிவந்தவனாயும், சிவந்த ஆடையன் - சிவப்பான உடையை உடுத்தவனாயும்.

அடி-211, 212: செ அரைச் செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த அடி மரத்தை யுடைய அசோக மரத்தினது குளிர்ந்த தளிர்கள் அசையும் காதுகளை யுடைய வனாயும்.

அடி-213: கச்சினர் - உடையின்மேல் இறுகக் கட்டிய கச்சினை உடையனவாயும். கழலினர் - வீரர் அணியும் கழலினைக் காலில் கட்டினவனாயும் செச்சைக் கண்ணியன் - வெட்சி மாலையை அணிந்தவனாயும். (இங்கு மாலை “கண்ணி” எனப்பட்டது.

அடி-214: குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் - குழலையும், கொம்பையும், மற்றும் சில சிறு வாச்சியங்களையும் ஒலிப்பிக்கின்றவனாயும்.

அடி-215: தகரன் - ஆட்டுக் கிடாயைப் பின்னே உடையவனாயும், (இது பலியிடப்படுவது, அன்றி, முருகன் ஊர்தி அடையாளமுமாம்.) மஞ்ஞையன் - மயிலை ஊர்பவனாயும். (இம்மயில், செயல் வல்லோரால் செய்து தரப்பட்டது.)

அடி-215, 216: புகர் இல் சேவல் அம் கொடியன் - (ஊர்திக்கு மேலே பறக்க எடுத்த) குற்றம் இல்லாத கோழிக் கொடியை உடையவனாகியும். நெடியன் - உயரத் துள்ளி ஆடுதலால் நீண்ட உருவம் உடையவனாயும், தொடி அணி தோளன் - தோள்வளையை அணிந்த தோள்களையுடைய வனாயும்.

அடி-219, 218: மருங்கின் கட்டிய குறும் பொறிக் கொண்ட நிலன் நேர்பு துகிலனன் - இடையிலே புரளக் கட்டிய, சிறிய புள்ளிகளைக் கொண்ட, நிலத்திற் பொருந்து தலையுடைய துகிலை உடையவனாயும் நறுந் தண் சாயல் - நல்ல மென்மைத் தன்மையை உடைய (துகில், நேர்பு, தொழிற் பெயர்)