அறும்படி அறுத்து, எங்கும் தூங்கும் படி தூங்க விட்டு. (‘துணையாக’ என ஆக்கம் வருவிக்க). அடி-247: பல் உருவப் பூத் தூஉய் - பல நிறங்களை யுடைய பூக்களை நிரம்ப இறைத்து. அடி-247, 248: வெரு வரக் குருதிச் செந்தினை பரப்பி - கண்டார்க்கு அச்சம் வருமாறு, இரத்தத்தோடு கலந்த செம்மையான தினையைப் பரப்பி வைத்து. அடி-236: முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - மாறுபட்ட நிறத்தை யுடைய இரண்டு ஆடைகளை (ஒன்றை உடையாகவும், மற்றொன்றை வல்லவாட்டாகவும்) ஒருங்கு உடுத்து. அடி-237: செந்நூல் யாத்து - சிவப்பு நூலைக் கையில் காப்பாகக் கட்டி. அடி-245: நறும் புகை எடுத்து - நறுமணம் கமழும் உயர எடுத்து. அடி-246: இமிழ் இசை அருவியோடு இன் இயம் கறங்க - ‘இழும்’ என்னும் ஓசையைத் தருகின்ற அருவிகளோடு கூடி இனிய வாச்சியங்களும் ஒலிக்க. அடி-245: குறிஞ்சி பாடி - குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகாராகக் குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகிய அந்நிலத்துப் பண்களில் பாட்டுக்களைப் பாடி. அடி-245: நளி மலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி - செறிந்த மலைகளின் எதிரொலியை உடைய தங்கள் நல்ல ஊர்களை, ‘அவை வாழ்வனவாக’ என வாழ்த்தி. அடி-234, 235: ஐது உரைத்துக் குடந்தம் பாட்டு - அழகிதாகிய முகமனுரை கூறி உடல் வளைந்து கும்பிட்டு. அடி-249: முருகு இயம் நிறுத்து - முருகனுக்கே உரிய வாச்சியங்களை நிலையாக ஒலிப்பித்து. அடி-249, 250: முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உரு கெழு வியல் நகர் - (‘தெய்வம் இல்லை’ என்று) முரணிக் கூறினவர்கள் நெஞ்சு நடுங்க முருகனை அவ்வழியில் வந்து பொருந்தச் செய்த, (பல வகையாலும்) அச்சம் பொருந்திய, அகன்ற கோயிலின்கண். ‘குறமகள், கொடியொடு அமை வர மண்ணி, அப்பி, சிதறி, சிதறி, பலிச் செய்து, பிரப்பு இரீஇ, விரை தெளித்து, மாலை தூங்க நாற்றி, பூத்தூஉய், தினை பரப்பி, அருவியோடு இயம் கறங்கக் குறிஞ்சி பாடி, நன்னகர் வாழ்த்தி, ஐது உரைத்துக் குடந்தம் பட்டு, உட்க முருகு ஆற்றுப்படுத்த நகர் என இயைத்துக் கொள்க, முருகனை ஆற்றுப் படுத்தலாவது, அவன் அருளால் குறிப்பார்த்துக் கூறுதலும்,
|