பக்கம் எண் :

391திருமுருகாற்றுப்படை

அடி-267: மாலை மார்ப - (போர்க் காலத்திலும் அதனால் வருந்துதல் இன்மையால்) இன்பத்திற்கு உரிய தாரினை அணிந்திருக்கும் மார்பை உடையவ,நூல் அறி புலவ - எல்லா நூற்பொருள்களையும் இயல்பிலே அறிந்த அறிவ.

அடி-268: செருவில் ஒருவ - போர்க் களத்தில் ஈடாவரர் இன்றி யிருப்பவ. பொருவிறல் மள்ள - போர் பொருமிடத்து வெற்றியே பெறும் வீர.

அடி-269: அந்தணர் வெறுக்கை - அந்தணர்க்கு அவர் பெறும் செல்வமாம் தன்மைய. அறிந்தோர் சொல் மலை - அறிந்தோர் புகழ்ந்து சொல்லும் சொற்களின் திரட்சியானவ.

அடி-270: மங்கையர் கணவ - ஒருவரன்றி மங்கையர் இருவர்க்குக் கணவ.

அடி-271: வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ - வேல் பொருந்திய பெரிய கையால் வந்து நிறையும் பெரிய வெற்றிச் செல்வத்தை உடையவ.

அடி-272, 273: குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்துக் குறிஞ்சி கிழவ - ‘கிரௌஞ்சம்’ என்னும் மலையை அழித்த குறையாத வெற்றியையுடைய குறிஞ்சி கிழவ. விண் பொரு நெடு வரைக் குறிஞ்சி கிழவ - வானத்தை அளாவும் உயர்ந்த மலைகளை யுடைத்தாகிய குறிஞ்சி நிலத்தை உரிமையாக உடையவ. (“குறிஞ்சிக் கிழவ” - என்பதில் ககர ஒற்று விரித்தல்.)

அடி-275: பெறல் அரு மரபின் முருக - யாவராலும் பெறுதற்கரிய முறைமையினை யுடைய முருக. (‘முருகன்’ என்னும் பெயர்க் காரணத்தை மேல் விளக்குவார்) பெரும் பெயர் - ஒரு மொழிப் பொருளாய் உள்ள (முருக. ஒரு மொழி யாவது, வேதம் முதலிய அனைத்து நூல்களின் பொருள் களையும் அடக்கி நிற்கும் ஒரு சொல். அச்சொல் முருகன் மேலதாயது மேல். “ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி” என்பதில் சொல்லப்பட்டது.1

அடி-276: நசையுநர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள - நினது இன்பத்தை நுகர்தலை விரும்பி நின்பால் வந்தவர்க்கு அதனை அருகாதே நுகர்விக்கின்ற பெரும்புகழை ஆளுதலுடையவ.

அடி-280: பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் - உயர்ந்தோர் எடுத்துச் சொல்லித் துதிக்கின்ற எண் மிகுந்த பெயர்களையுடைய இயவுள். (எண் மிகுந்த பெயர்களை ‘ஆயிரம் பேர்’ என்பர். ‘இயவுள்’ என்பதும் ‘கடவுள்’ என்பத னோடு ஒத்த


1. அடி - 191.