அடி-291: என - என்று விண்ணப்பிக்க. (இவ்வாறு அவர் வழியாக அன்றி நீ அவனை நேரெ பெறுதல் அரிது’ என்றற்கு இது கூறினான். அடி-323: பழமுதிர் சோலை மலை கிழவோன் - (மேற் கூறிய இடங்களோடு) பழம் முற்றின சோலைகளை மிக உடைமையால், ‘பழமுதிர் சோலை மலை’ என்றே பெயர் பெற்ற மலையையும் தனக்கு உரிமையாக உடைய அம்முருகன் (கூளியர் கூறியவற்றைக் கேட்டு.) அடி-294: தான் தானே. அடி-293. 294: திறல் தெய்வம் சான்ற விளங்கு உருவம் வான் தோய் நிரப்பின் வந்து எய்தி - (யாவரும் வழிபடும் வழிபாட்டு வடிவத்தில் அவனைக் கண்டு நிற்கின்ற உன் முன்னே, தன்னை நீ நேரே கண்டு, ‘அவனே’ எனத் தெளிதற் பொருட்டு, முதலில்,) தெய்வத்திறம் நிரம்பிய பேரொளியுடன் விளங்குகின்ற வடிவம் வானத்தை அளாவும் உயரத்தொடு கூடியதாய்த் தோன்ற உன்முன் எதிர் வந்து நின்று. (பின்னர்) அடி-295: அணங்கு சால் உயர் நிலை தழீஇ - (அச்சத் தால் உனக்குத்) துன்பம் நிறைந்ததாகின்ற அந்தப் பெருநிலையைத் தன்னுள் அடக்கி. அடி-295, 296: பண்டைத் தன் தெய்வத்து மணம் கமழ் இள நலம் காட்டி - தான் அவதரித்த அன்று உளதாகிய, இயல்பாகவே தெய்வ மணம் கமழ்கின்ற, இளமையோடு கூடிய, அழகிய அந்த வடிவத்தையே (நீ கண்டு நிற்க) நெடு நேரம் காட்டி (‘முருகு’ என்னும் சொல் தரும் மணம், இளமை, அழகு - என்னும் இம்மூன்று பொருளையும் இங்கு எடுத்துக் கூறி, முருகன் அப்பெயர் பெற்ற காரணத்தை விளக்கினார்) (மக்கள் யாக்கை இயல்பாகவே முடை நாற்றம் உடைத்தாதல் போலத் தேவ யாக்கை இயல்பாகவே மணம் உடையது. அது பற்றியே சிவபிரான் நக்கீரர் தொடுத்த வழக்கில் ‘தேவ மாதர் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையோ’ என வினாவினார். நக்கீரர் தாம் பிடித்தது பிடியாக, ‘இல்லை; தேவ மாதர் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை’ எனச் சாதித்தார். அப்பால் சிவபெருமான் நீ நாள்தோறும் வழிபடும், அருளே திருமேனியாகிய ஞானப் பூங்கோதைதன் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லையோ’ என்றார். ‘இல்லை அவ்வம்பிகைதன் கூந்தலுக்கும் செயற்கை மணம் அன்றி, இயற்கை மணம் இல்லை’ எனப் பிடிவாதம் பேசினார். ‘அருளே திருமேனியான அம்பிகை கூந்தலுக்கு, அசுத்தத்திலும் அசுத்தமாய பிரகிருதியில் தோன்றும் மலர்களே நறுமணத்தைத் தரும்’ என்றது எத்துணைப் பிடிவாதமான பேச்சு! அவ்வாறு பிடிவாதம் பேசிய
|